தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது இனிப்பு தான். இனிப்புகள் அதிகமாக சாப்பிட்டாலும் வயிற்றை நலமாக வைத்துக்கொள்ள உதவும் தீபாவளி லேகியம் செய்முறை உங்களுக்காக. எல்லா ஆண்டும் எத்தனையோ பண்டிகை வந்தாலும், தீபாவளிக்கு இருக்கும் மவுசு தனி. புத்தாடை வாங்குவதில் இருந்து, புது வகையான பட்டாசுகள் வரை அனைத்துமே அந்த ஆண்டின் டிரெண்டுக்கு ஏற்றார் போல் இருக்கும். தீபாவளி லேகியம் செய்முறை-1 தீபாவளியன்று குடும்பமே ஒன்று கூடி, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு சிறப்பான நாள். நிறைந்திருக்கும் சந்தோஷத்தில், சுற்றி நடப்பதே மறந்துபோகும் அளவுக்கு மகிழ்ச்சி இருந்தால், சாப்பிடும் இனிப்புகளின் அளவில் மட்டும் கவனம் இருந்துவிடுமா என்ன? தீபாவளி முடிந்த பின் தான் அதிகமாக இனிப்பு சாப்பிடதன் விளைவு பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கும் ஒரு தீர்வு உள்ளது. ஸ்பெஷல் லேகியம். அதனால் தான் இது தீபாவளி லேகியம் தேவைப்படும் பொருட்கள் : தனியா – கால் கப் அரிசி திப்பிலி – 10 கிராம் கண்டந்திப்பிலி – 10 கிராம் சுக்கு – 10 கிராம் சீரகம் – அரை மேசைக்கரண்டி மிளகு – ஒரு மே...