Skip to main content

நீண்ட ஆயுளுடன் இருக்கணுமா அப்ப இதை தினமும் சாப்பிடுங்கள்


இப்போதெல்லாம் பலரின் அன்றாட வழக்கமாக இந்த "கடலை போடும்" பழக்கம் உள்ளது. கடலைக்கென்றே பல வித மகத்துவங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் இதற்கென்று வித்தியாசமான பெயர்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மல்லாட்டை, கடலை, நில கடலை, வேர் கடலை, மணிலா கொட்டை என பல பெயர்கள் இதற்கு உள்ளது.


இதை போன்றே இதன் மகத்துவமும் அதிகமாக உள்ளது என அண்மைய ஆராய்ச்சி சொல்கிறது. குறிப்பாக தினமும் 5 முதல் 10 கடலையை நாம் சாப்பிட்டு வந்தால் நமது சாவை தள்ளி போட்டு விட முடியுமாம். எப்படி என்பதை விரிவாக இனி தெரிந்து கொள்வோம்.



கடலையின் சிறப்புகள்..! பீச்சுக்கு சென்றாலும், ஏதேனும் பேருந்து நிலையங்களுக்கு சென்றாலும் நம் காதுகளில் பளீர் என்று இந்த கூப்பாடு விழ செய்யும். "கடலை, கடலை" என்று சிலர் கூவி கூவி விற்பார்கள். எப்போவாவது கடலை சாப்பிட்டாலே பல நன்மைகள் இருக்கும். ஆனால், தினம் 5 முதல் 10 கடலை சாப்பிட்டால் இவற்றின் பலன் இரட்டிப்பாகி விடும்.



எவ்வளவு சத்துக்கள்..? மற்ற உணவு பொருட்களை போன்றே கடலையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.

1 கப் கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதோ... 
வைட்டமின் ஈ 50% 
போலேட் 43% 
கால்சியம் 9% 
இரும்பு சத்து 12% 
மெக்னீசியம் 63% 
பாஸ்பரஸ் 57% 
பொட்டாசியம் 30% 
சோடியம் 19% 
கொழுப்புசத்து 63% 
நார்சத்து 54% 

கடலை ஆராய்ச்சி..! கடலையை பற்றிய ஆராச்சியில் பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 

கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தினமும் கடலையை சாப்பிடாதவரை விட தினமும் கடலையை சிறிதளவு எடுத்து கொள்வோர் நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாக கண்டறிந்தனர். 

10கிராம் போதுமே..


! தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்க கூடிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இவை இதய நோய், புற்றுநோய், மற்றும் சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளுமாம்.


சீனர்களின் பழக்கம்... 



சீனர்கள் தங்களது உணவில் தினமும் கடலையை சேர்த்து கொள்வார்கள். வெறும் கடலை அல்லது கடலையால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் உணவு பொருட்களை தினமும் சிறிதளவு அவர்கள் எடுத்து கொள்வார்களாம். இதனால் தான் சீனர்கள் நீண்ட காலம் நோயின்றி அதிக ஆயுளுடன் வாழ்கின்றனர்.


சாவை தள்ளி போடும் கடலை..! 


கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் ஆகியவை தான் உங்களின் சாவை தள்ளி போட செய்கிறது. குறிப்பாக சுவாச நோய்கள், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பாதிப்புகள் போன்றவற்றை இவை ஏற்படும் தடுக்கிறது. எனவே, நோய்கள் இன்றி நீங்கள் அதிக காலம் ஆரோக்கியமாக வாழலாம்.


கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்குமா..? 



கடலையில் நார்சத்து அதிகம் உள்ளது. எனவே, இவை உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக இவை உடல் பருமனை குறைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறிதளவு கடலையை உங்களின் டயட்டில் சேர்த்து வந்தால் எளிதில் உடல் எடை குறைந்து விடுமாம்.


அளவு முக்கியம்..! 



கடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதற்காக கடலையை அள்ளி அள்ளி சாப்பிட கூடாது. தினமும் 5 முதல் 10 கடலையே மிக சிறந்த அளவு என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதாவது 10 கிராம் அளவு கடலையை சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பலன் கிடைக்காதாம்.


இதய பாதுகாப்பிற்கும் கடலை..! 



பலருக்கு இது ஆச்சரியமான தகவலாக தான் இருக்கும். ஏனென்றால், கடலை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறதாம். குறிப்பாக ரத்த நாளங்களில் ஏற்பட கூடிய நோய்களை இவை தடுக்கிறது. மேலும், மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும் இவை காக்கிறது.


யாருக்கு அதிகம்..? 



பொதுவாகவே ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் சற்றே வேறுபட்டிற்கும். அதனால், சாப்பிட கூடிய உணவு பொருட்கள் வெவ்வேறு விதத்தில் அவர்களின் உடலுக்கு நலனை தரும். ஆனால், தினமும் கடலை சாப்பிடுவதால் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் சம அளவில் இதன் பயன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



இனி உங்கள் விருப்பம் என்ன..? பல ஆராய்ச்சியில் கூறுவது படி, கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே ஏற்படுகிறது. 10 கிராம் அளவிற்கு அதிகமாக இதனை எடுத்து கொள்வது உகந்தது அல்ல. எனவே, நீங்களும் இதனை சாப்பிட்டு ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழுங்கள் நண்பர்களே.



Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.