பாகர்க்காய் ஒரு கொடி வகையாகும். இராண்டு பவகையான பாகர்க்காய்கள் உள்ளன.ஒன்று நீளமாகவும் மற்றொண்டு உருண்டையாகவும் இருக்கும். இதன் இலை, காய், பழம், விதை எல்லாமே மருத்துவத்திற்குப் பயன்படுவைதான்.
பாகற்காய் வாரத்திற்கு ஒரு முரையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் நல்லப் பலனைத் தரும். "உடல் நலம் இல்லாமல் மருந்துண்ணும் காலங்கலில் கண்டிப்பாக பாகற்க்காய் எடுத்துக் கொள்ளக்கூடாது". கசப்பு சுவை இன்றியமையாததாகும் உடல் இயக்கத்திற்கு நரம்பு முக்கிய பங்கை வகிப்பதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் கட்டுப்பட
கசப்புத்தன்மை உடல்நலத்திற்கு நல்லது என்று எண்ணி அளவுக்கு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.
இதனால் தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து பாகற்காய். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆறுதலளிக்கும் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.
செய்முறை:
பாகற்காயை இடித்து பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அதே அளவு பாகற்க்காய் இலையை இடித்து பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
அதேபோன்று நாவல் மரப்பட்டையை இடித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். மூன்றும் ஒரே அளவு எடுத்து ஒன்றாக கலந்து காலையில் 25 மில்லி அல்லது 30 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
பயன்கள்:
பொதுவாக பாகற்க்காய் ஒரு கிருமி நாசினியாகும். ஆதலினால் இதன் இலை, காய், பழம் ஆகிய அனைத்தும் பல நன்மைகளை அளிக்கிறது. பாகற்க்காய் இலையை இடித்து தினசரி 25 மில்லி சாப்பிட்டால் போதும் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறிவிடும். பாகல் இலைச் சாற்றை அருந்தினால் வாதம், பித்தம், கபம் ஆகியவை கட்டுப்படுத்துகிறது.
பாகற்காயை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாதம் தொடர்பான நோய்கள் மற்றும் உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பூசி வந்தால் எரிச்சல் தணியும்.
இருமலுக்கு இதமான மருந்து
காசம், கபம், இருமலால் அவதிப்படுபவர்கள் இது ஒரு இதமான மருந்தாக உள்ளது. நாட்டு பாகத்தையும் தூதுவளை இலையையும்
சம அளவாக எடுத்து நன்றாக இடித்து 15 மில்லி அளவு எடுத்துக்கொண்டு அதில் 50 மில்லி பால் கலந்து தினசரி காலையில் குடித்துவர இருமல் குணமாகும். மூலநோய் அகல மூலநோய் உள்ளவர்கள் தினசரி 15 மில்லி வீதம் தொடர்ந்து குடித்து வந்தால் மற்றும் இதன் இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் குணமாகும்.