பொதுவாக நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது தான் இந்த குறட்டை ஏற்படுகிறது. நமது தொண்டை பகுதி மிகவும் இலகுவாகி அதிக சத்தத்தை குறட்டையாக ஏற்படுத்துகிறது.
- தொண்டை பகுதியை சுற்றியுள்ள திசுக்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது குறட்டை வருகிறது.
- 1 கப் பாலை கொதிக்க வைத்து விட்டு, பிறகு அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை தூங்க போகும் 30 நிமிடத்திற்கு முன்னர் குடித்தால் குறட்டை பிரச்சினையை சரி செய்து விடுமாம்.
- தினமும் தூங்குவதற்கு முன்னர் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சப்பிட்டு விட்டு தூங்கவும்.
- வெது வெதுப்பான நீரில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து ஆவி பிடித்தால் உங்களின் குறட்டை பிரச்சினை முடிவுக்கு வரும்
- புதினா மற்றும் வெந்தயத்தை நீரில் கலந்தும் குடிக்கலாம்.
- வெது வெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடியை கலந்து தினமும் தூங்குவதற்கு முன்னர் குடித்து வந்தால் தொண்டை பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் குணமாகி விடும்
- இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும்.