 தூதுவளைக் கீரையுடன், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட இருதய நோயால் உண்டாகும் தீராத இருமல் குணமாகும். மேலும்
தூதுவளைக் கீரையுடன், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட இருதய நோயால் உண்டாகும் தீராத இருமல் குணமாகும். மேலும்நுரையீரல் பலப்படுத்தப்பட்டு இதயமும் வலுவாகும்.
»சிறுகீரை வேரை இடித்து சாறு பிழிந்து, 30 மில்லி லிட்டர் அளவில் காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட சிறுநீர் தாராளமாய் பிரியும். உடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறும். இதய வீக்கம் குணமாகும். அதிக உடல் எடையை குறைக்கும்.
»முருங்கை இலை சாறு, தேன், மிளகு தூள் சேர்த்து சாப்பிட, ரத்தம் அழுத்தம் சீராகும். இதயம் சீராக இயங்கும்.
»அரைக்கீரையை பருப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவர இருதய நோய், கீல்வாத காய்ச்சல், குணமாக்கும்.மேலும் இதய பலவீனம் சரியாகும்.
»மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வர எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம் உறுதியாகும். இதயம் சீராக இயங்கும்.
»வல்லாரை இலையுடன் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சீராகும். கொழுப்பினை கரைத்து, நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். மூளை அபாரமாய் செயல்படும். இதய நோய்கள் தீரும்.
»புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு இவைகளை சம அளவு எடுத்து, பனங்கற்கண்டு கலந்து காய்ச்சி பருகி இதய கோளாறுகள் நீங்கும். நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வு நெஞ்சு வலி ஆகியன தீரும்.
»கொத்தமல்லி இலையுடன், சம அளவு இஞ்சி சேர்த்தரைத்து, கொட்டைப் பாக்களவு காலை, மாலை சாப்பிட மயக்கம் வாந்தி தலைசுற்றல் மற்றும் இதய படபடப்பு ஆகியன தீரும்.
»உத்தாமணி இலையை சாறெடுத்து, அதை ஒரு துணியில் நனைத்து, நெஞ்சு வலி உள்ள இடத்தில் போட வலி உடனே தணியும்.
»மூக்கரட்டை கீரையுடன், உப்பு, புளி, மிளகாய், பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட மலம் தாராளமாகக் கழியும். நோயாளிகளுக்கு இதமான உணவாகும்.
»தாமரைப் பூ, ஆவாரம் பூ ,செம்பருத்தி பூ ஆகியவற்றை சம அளவு கலந்து, கொதிக்கவைத்து சாப்பிட இதய நோய் தீரும்.
»தாமரைப் பூ ,ஆவாரம் பூ ,செம்பருத்திப் பூ ,ரோஜாப்பூ ,கருந்துளசி, சுக்கு ,மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவைகளை 50 கிராம் வீதம் எடுத்து, தூள் செய்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி காலை மாலை சாப்பிட நெஞ்சு வலி,மாரடைப்பு வராது.
»செம்பருத்திப் பூ 10 எடுத்து ,ஒரு டம்ளர் நீர், 5 மிளகு, 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்த இதய படபடப்பு இதயவலி இதய அடைப்பு ரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும்.
»வேப்பம் பூவுடன் ,ஆவாரம்பூ சம அளவு சேர்த்து 5 சிட்டிகை மஞ்சள் தூள் 5 மிளகு சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட ரத்த அழுத்தம் சீராகும். நோயில் உண்டாகும் மயக்கம் தீரும்.