நாம் தற்பொழுது பின்பற்றும் ஜோதிட சாஸ்திரம் நம் முன்னோர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டது. அதன்படி நமது வாழ்க்கை, செயல்பாடுகள் மற்றும் குணநலன்கள் என அனைத்தையும் தீர்மானிப்பது
நமது ஜாதகமும், ராசியும்தான் என்பது பரவலாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. நம்மை போலவே துல்லியமாக ஜோதிடத்தை கணிக்கக்கூடிய ஒரு இன மக்கள் பூமியின் மற்றோரு மூலையில் வாழ்ந்து வந்தனர். அவர்கள்தான் எகிப்தியர்கள்.
உலகின் தலைவிதியை தீர்மானிப்பதில் பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் முக்கியப்பங்கு வகித்தனர். அவர்கள் தங்களுக்கு உதவிகள் தேவைப்படும்போதெல்லாம் இரவில் ஒளிரும் வானத்திடம் அறிவுரை கேட்பார்கள். நட்சித்திரங்கள்தான் நமது தலைவிதியை தீர்மானிப்பதாக அவர்கள் உறுதியாக நம்பினர். தற்போது இருக்கும் ஜோதிடத்திற்கும் எகிப்தியர்கள் பின்பற்றிய ஜோதிடத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. அவர்களும் 12 ராசிகளைத்தான் கொண்டிருந்தார்கள். எகிப்தியர்களின் ஜோதிடத்தின் படி அவர்கள் உங்களை பற்றி கூறுவது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒசிரிஸ் - மேஷம்
எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி ஓசிரிஸ் என்பவர் மரணம் மற்றும் நித்யவாழ்க்கையின் கடவுளாவார். மறுபிறப்பிற்கும் இவர்தான் கடவுளாவார். ஓசிரிஸ் ராசியில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயற்கையாவே தலைமைப்பண்பு மிக்கவர்கள் மற்றும் பணியிடங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்குவார்கள். இவர்களின் இயற்கையான பலங்கள் தைரியம் மற்றும் உற்சாகம், பலவீனம் கர்வமாகும். இவருக்கு பொருத்தமான ராசிகள் ஐசிஸ் மற்றும் தோத்.
அமுன் - ரா - ரிஷபம்
அமுன் - ரா பிரபஞ்சம் மற்றும் மனித இனத்தின் படைப்பாளராகவும், அனைத்து கடவுள்களின் கடவுளாகவும் கருதப்படுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்கள் கடினமான, வலிமையான மற்றும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களும் சிறந்த தலைவராகவும் இருப்பார்கள் ஏனெனில் இவர்கள் சிறந்த கவனிப்பாளராகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் மிகவும் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். இவர்களின் பலங்கள் வலிமையும், உதவும் குணமும். பலவீனம் ரகசியமாக இருப்பது. இவர்களுக்கு பொருத்தமான ராசி ஹோரஸ்.
சேத் - மிதுனம்
எகிப்திய புராணங்களின் படி சேத் என்பவர் வானிலையை கட்டுப்படுத்தும் கடவுளாவார். இவர் தன் சகோதரரை கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி எகிப்து முழுவதும் எரிந்ததற்கு புகழ்பெற்றவர். நீங்கள் இந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தால் நீங்கள் சுதந்திரமானவர்களாகவும், சவால்களை விரும்புபவர்களாகவும், சாகசக்காரர்களாகவும் இருப்பார்கள். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் நீங்கள். உங்களின் பலம் உங்களுடைய உறுதியான குணம். பலவீனம் கோபம் மற்றும் மேலாதிக்கம். இவர்களுக்கு பொருத்தமான ராசிகள் கெப்.
பெஸ்டட் - கடகம்
இவர் ஒரு பெண் கடவுளாவார். குடும்ப வாழ்க்கைக்கு கடவுளான இவர் பூனை உருவில் வழிபடப்படுகிறார். இவர் பூனை தலையுடனும் மனித உருவத்துடனும் இருப்பார். இந்த கடவுள் பெண்களை பாதுகாக்கவும், அவர்களின் கருவை பாதுகாக்கவும் பொறுப்பானவர்கள். இவர்கள் அமைதியானவர்களாகவும், கூச்ச சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் பலம் வசீகரமும், சிந்தனைகளும். பலவீனம் பொறாமை ஆகும். இவர்களுக்கு பொருத்தமான ராசி ஹோரஸ்
அனுபிஸ் - சிம்மம்
அனுபிஸ் பாதாள உலகத்தின் கடவுளாகவும், மறுவாழ்விற்கான கடவுளாகவும் கருதப்படுகிறார். இவரின் கடமை என்னவெனில் ஆன்மாக்களை கண்டுபிடித்து அதன் தூய்மையை கண்டறிவது. தூய்மையான இதயங்களை அவர் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். இவர்கள் ஆர்வம் மிக்கவர்களாகவும், கற்பனைத்திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள், இவர்கள் தனிமையில் செயல்பட்டால் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்களின் பலம் உண்மையும், இரக்ககுணமும். பலவீனம் கட்டுப்படுத்தும் மற்றும் மூர்க்கமான குணம். இவர்களுக்கு பொருத்தமான ராசி பெஸ்டட் மற்றும் ஐரிஸ்.
தோத் - கன்னி
தோத் என்பவர் ஞானம் மற்றும் அறிவின் கடவுளாவார். இந்த ராசியில் பிறந்தவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் எழுத்து துறையில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இவர்கள் குழுக்களை கட்டுப்படுத்துபவர்கள் மற்றும் இவர்கள் மீது மற்றவர்கள் அதிக மதிப்பு கொண்டவராக இருப்பார்கள். இவர்களின் பலம் கற்பனைத்திறன் மற்றும் தலைமைப்பண்பு, பலவீனம் சோம்பேறித்தனம். இவர்களுக்கு பொருத்தமான ராசி ஐசிஸ்.
ஹோரஸ் - துலாம்
இவர் வானத்தின் கடவுளாவார் மேலும் பாரோ கடவுளின் பாதுகாவலர் ஆவார். இந்த ராசியில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.ஹோரஸ் ராசியில் பிறந்தவர்கள் அதிக கவனம் மிக்கவர்கள் அதனால் தங்கள் இலட்சியத்தை எப்பாடுபட்டாவது சாதித்துவிடுவார்கள். இவர்களின் பலம் உறுதியான எண்ணமும், வசீகரமும்தான். பலவீனம் பிடிவாதம். இவர்க்ளுக்கு பொருத்தமான ராசி பெஸ்டட் மற்றும் கெப்.
மட் - விருச்சிகம்
மட் என்பதற்கு உலகின் தாய் என்பது பொருளாகும், இவரின் பணியே மனித இனத்தை காப்பதுதான். இந்த ராசியில் பிறந்தவர்கள் அதீத கவனம் மிக்கவர்களாகவும், குறிக்கோள் சார்ந்த நபராகவும் இருப்பார்கள். தங்களின் தேவை என்னவென்பதையும், அதனை அப்படி பெற வேண்டும் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், வசீகரமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் பலம் உழைப்பும், கவனமும். பலவீனம் தாழ்வு மனப்பான்மை. இவர்களுக்கு பொருத்தமான ராசி தோத்.
ஹபி - தனுசு
எகிப்தியர்களின் நம்பிக்கை படி ஹபி என்பவர் நைல் நதி மற்றும் விவசாயத்தின் கடவுளாவார். இவர்கள் ஆணின் முகத்துடனும், பெண்ணின் மார்பையும் கொண்டிருப்பார். இந்த ராசியில் பிறந்தவர்கள் மென்மையானவர்களாகவும், மற்றவர்கள் மீது அக்கறை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் பலம் புத்திகூர்மை, பலவீனம் மேலாதிக்கம். இவர்களுக்கு பொருத்தமான ராசி செத்.
கெப் - மகரம்
கெப் பூமியின் கடவுளாக கருதப்படுபவர். இவரின் சிரிப்பு நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும், அக்கறை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக அவர்களின் நண்பர்கள் மீதும், குடும்பத்தினர் மீதும் மிகுந்த அன்போடு நடந்துகொள்வார்கள். இவர்களின் பலம் பாசம் மற்றும் நியாயமான உள்ளம், பலவீனம் பதட்டம். இவர்களுக்கு பொருத்தமான ராசி ஹோரஸ்.
செக்மட் - கும்பம்
செக்மட் போரின் கடவுளாவார், அதேசமயம் இவர்கள் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க தவறமாட்டார்கள். இவர்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள், மேலும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களின் பலம் உற்சாகம், பலவீனம் பொறுமையின்மை. இவர்களுக்கு பொருத்தமான ராசி கெப்.
ஐசிஸ் - மீனம்
குழந்தைகள் மற்றும் தாயுள்ளத்திற்கு கடவுளாவர் ஐசிஸ். பெண்கள் தாய்மடையும்போது அவர்களை பாதுகாப்பது இவரின் கடமையாகும். இவர்கள் சுருக்கமாக, நேரடியாக பேசக்கூடியவர்கள். அதிக ஆற்றல் மிக்கவர்களாகவும், விளையாட்டுகுணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் பலம் ஆர்வமும், இலட்சியமும், பலவீனம் முன்கோபம். இவர்களுக்கு பொருத்தமான ராசி ஓஸிரிஸ்