Skip to main content

விஷ பூச்சி கடிக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியம்

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.
வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.


சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த  இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

தேள் கடிக்கு, எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால், தேள் கடி நஞ்சு இறங்கி விடும். 

பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி)  தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் போன்றவைகளால் உங்கள் குழந்தைக்கு அசெளகரியமா? இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...

மூக்கடைப்பு பிரச்சினையின் அறிகுறிகள் மூச்சு விடும் போது சத்தம் கேட்குதல் அல்லது சிரமப்படுதல் குறட்டை மூக்கு ஒழுகுதல் தும்மல் மூக்கு ஒழுகுதல் குழந்தைகள் மட்டும் ஏன் அடிக்கடி இதனால் பாதிக்கப்படுகிறார்கள்?