Skip to main content

பேஸ்புக் ஆதிக்கத்தை வீழ்த்த துடிக்கும் ட்ரூ இன்டியன் சமூக வலைத்தளம் - இன்று துவக்கம்

சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘பேஸ்புக்’ இந்தியர்களிடையே செலுத்திவரும் இணைய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ட்ரூ இன்டியன்’ வலைத்தளப் பக்கம் இன்று அறிமுகம் ஆகிறது.


பீகார் மாநில நிதிமந்திரி ஜகநாத் மிஸ்ராவின் மகனான மணிஷ் மிஸ்ரா தலைமையிலான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவால் இயக்கப்படவுள்ள ‘ட்ரூ இன்டியன்’ சமூகவலைத்தளமானது, இந்திய சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, சமூகநீதியை பிரதிபலிக்கும் வகையில் திகழும் என இந்த வலைத்தளப் பக்கத்தை தொடங்கி, நிர்வகிக்கவுள்ள ‘பிரண்ட்ஸ் ஃபார் லைப்’ தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய ஃபேஸ் புக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் முன்னர் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகளுக்கு ஒப்பானதாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டும் ‘பிரண்ட்ஸ் ஃபார் லைப்’ தொண்டு நிறுவனம், தனது சுயலாபம், தனது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் லாபம் என்ற வர்த்தக நோக்கத்தில் 21-ம் நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனியைப்போல் செயல்படும் பேஸ்புக் (ஆர்குட்டை பேஸ்புக் வீழ்த்தியதைப்போல்) இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியர்களிடையே செல்வாக்கை இழக்கும் வகையில் ‘ட்ரூ இன்டியன்’ வலைத்தளப் பக்கத்தின் செயல்பாடுகள் அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.