Friday, November 20, 2020

வங்கக்கடலில் 23ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் 23ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இதன் தாக்கம் காரணமாக வருகிற 23-ஆம் தேதி தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


23ம் தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு மேற்கு திசை நோக்கி இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி ,நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நாளையும், நாளை மறுதினமும்  ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வரும் 23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை , சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ள வானிலை மையம், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாக இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். வங்கக்கடலில் தென்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.