பைன்ஆப்பிள் கோவா பார்ப்பதற்கு கொய்யா வடிவில் காணப்படுகிறது. இது உடல் எடை இழப்பு, சீரண சக்தியை அதிகரித்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், எலும்புகளின் வலிமை அதிகரித்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், ஊட்டச்சத்துகள், மெட்டா பாலிசத்தை சமநிலையில் வைத்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மூளை செயல்திறனை அதிகரித்தல், இரத்த சர்க்கரை அளவை குறைத்தல் போன்ற ஏராளமான நன்மைகளை தருகிறது.
எனவே இதை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதில் ஒரு சில பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. வயிறு பிரச்சினைகள், இரத்த சர்க்கரை அளவு குறைந்து போகுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பழத்தை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
இந்த பைன் ஆப்பிள் கோவா பிஜியா என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ஆக்லா சல்லியனா என்றழைக்கப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இது இனிப்பு பழம் என்பதால் சமையலில் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுகிறது. இதை பார்ப்பதற்கு சிறிய அவகேடா பழம் போன்று காணப்படும். இதனால் ஸ்மூத்தி, கோக்டைல், டிசர்ட், சட்னி மற்றும் பழ டிஷ்களில் பயன்படுகிறது.
இதன் சுவை தனித்துவம் வாய்ந்தது. இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. லேசான ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்டும் காணப்படும். நன்றாக பழுத்த பிறகு புதினா சுவை அடிக்கும் என்கின்றனர். மரத்தில் இருந்து இந்த பழத்தை பறிக்கும் போதே ஒரளவு பழுத்த வகையில் பறியுங்கள். ரொம்ப காயாக இருந்தால் கசக்கும். ரொம்ப பழமாக இருந்தாலும் சாப்பிட முடியாது. மீடியமான தன்மை இனிப்பு சுவையை தரும்.
ஊட்டச்சத்து அளவுகள் 100 கிராம் பழத்தில் 55 கலோரிகள் உள்ளன விட்டமின் சி - 50% (தினசரி அளவு) விட்டமின்கள் பி, ஈ, கே மற்றும் ஏ தாதுக்கள் காப்பர் மாங்கனீஸ் மக்னீசியம் பொட்டாசியம் இரும்புச் சத்து கால்சியம் நார்ச்சத்து - 15%(தினசரி தேவை) பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பினால்கள் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
நன்மைகள் நீங்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நோயெதிர்ப்பு சக்தி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், மெட்டா பாலிசம், ஆஸ்டியோபோரோசிஸ், சீரணமின்மை, டயாபெட்டீஸ், இரத்த ஓட்டம், மூளை செயல்கள், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளை களைகிறது.
பைன்ஆப்பிள் கோவாவை எப்படி சாப்பிடலாம்?
இதன் சதைப்பகுதி சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் மக்கள் இதை பாதியாக வெட்டி அதனில் உள்ள விதைகளை ரீமூவ் செய்து விட்டு ஜூஸி பகுதியை மட்டும் சாப்பிடுகின்றனர். அதன் மேற்புற தோலில் கூடுதல் நார்ச்சத்து இருப்பதால் அதையும் ரீமூவ் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. அதன் மேற்புற தோல் கசப்பாகவும் உள்ளே இனிப்பாகவும் இருக்கும். கொய்யாப் பழத்தை போன்று இருக்கும். இந்த பழம் சீக்கிரமாக பழுக்க ஆரம்பித்து விடும். பழுக்க ஆரம்பித்த உடன் ப்ரவுன் கலரில் நிறம் மாறும். பாதி பகுதி முழுவதும் ப்ரவுன் ஆக மாற ஆரம்பித்து விட்டால் அழுகி விட்டது என்று அர்த்தம். எனவே அதை சாப்பிடுவதை தவிருங்கள். இப்படி ஏராளமான நன்மைகளை தரும் பைன்ஆப்பிள் கோவாவை உங்கள் உணவிலும் சேர்த்து வரலாம்.