Thursday, May 9, 2019

நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் கும்குவாட் பழங்கள்

கும்குவாட் பழங்கள் மிகச் சிறிய வடிவத்தில் ஆரஞ்சு நிறத்தில் பளபளவென காணப்படும்ஆலிவ் விதை அளவிலேயான கும்குவாட் பழம் அள்ளிக் கொடுக்கும் நன்மைகள் ஏராளம்.

சீரண சக்திக்கு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சருமழகிற்கு, பற்களுக்கு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு
என்று நிறைய வழிகளில் பயன்படுகிறது. டயாபெட்டீஸ், கொலஸ்ட்ராலை குறைத்தல், எலும்புகளின் வலிமைக்கு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு என்று ஏகப்பட்ட பலன்களை தருகிறது.

குமுவேட்ஸ் (சிட்ரஸ் ஜபோனிகா) ருடேசே குடும்பத்தில் ஒரு சிறிய மரத்தின் பழங்கள். இந்த சிட்ரஸ் வகை பழங்கள் பார்ப்பதற்கு உள்ளேயும் வெளியேயும் ஆரஞ்சு போன்ற தோற்றமளிக்கிறது. இந்த மரங்கள் ஆசிய பசிபிக் பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. 1000 வருடங்களாக இந்த மரம் இருக்கிறது.


8 கும்குவாட் பழங்களில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனால் இதை ஒரு கையளவு கூட நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். இது நமது குடலிறக்கத்தை சரி செய்து சீரண சக்தியை சரி செய்கிறது.

குறைந்த சர்க்கரை அளவு, குறைந்த சோடியம், 0 கொலஸ்ட்ரால், 0.1கிராம் கொழுப்பு இதனுடன் நார்ச்சத்தும் இருப்பதால் டைப் 1&2 டயாபெட்டீஸ்க்கு மிகவும் சிறந்தது.

ஸ்விட்சர்லாந்தில் நடத்திய ஆராய்ச்சி படி இந்த பழத்தில் அதிகளவு விட்டமின் சி உள்ளது. இந்த விட்டமின் சி ஒன்னே போதும் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடலாம். இது ஒரு பயோசிந்தடிக் என்சைம் மாதிரி செயல்படுகிறது. அதே மாதிரி புதிய நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கி பாக்டீரியா, பூஞ்சை, வைரல் தொற்று களிலிருந்து உடலை காக்கிறது. விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நம் உடலை பாதுகாப்பாக வைக்க முடியாது. எனவே இந்த பழங்களை உணவில் சேர்ப்பது நல்லது.


கும்குவாட் பழங்களில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இதனால் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பற்சொத்தை போன்றவற்றை போக்கி வெண்மையான பற்களை பெறலாம்.