அஸ்பரகஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வற்றாத தாவர வகையைச் சேர்ந்தது இந்த யூக்கா. இதன் அறிவியல் பெயர் யூக்கா பிலமெண்டோசா. அஸ்பரகஸ் இனத்தின் 40 முதல் 50 வகை செடிகளில் யூக்காவும் ஒரு வகை ஆகும். பொதுவாக யுபோர்பியசியா மரபைச் சேர்ந்த யூக்கா வேர்
அதாவது மரவள்ளிக் கிழங்குடன் இந்த யூக்காவை குழப்பிக் கொள்ளும் பலர் உள்ளனர். ஆனால் மரவள்ளிக் கிழங்கும் இந்த யூக்காவும் வெவ்வேறானது.
இந்த தாவரத்தின் பழம், விதை, மற்றும் பூக்களைக் கூட நாம் உட்கொள்ளலாம். பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் யூக்கா பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
எப்படி பயன்படுத்தலாம்? இதனை நம்முடைய உணவிலும் இணைத்துக் கொள்ளலாம். ஆடம் நீடில் என்பது யூக்கா வகையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வகையாகும். இது பல்வேறு நன்மைகளைக் கொண்டது. யூக்காவில் சபோனின், ரிசர்வடோல், மற்றும் பல்வேறு தாவர வேதிப்பொருட்கள் இருப்பதால் மருத்துவ துறையில் பல்வேறு நன்மைகளைத் தருகிறது யூக்கா. காயங்களுக்கு மேலே தடவும் மருந்தாகப் பயன்படும் யூக்கா, பொதுவாக மாத்திரை வடிவத்தில் கிடைக்கிறது.
யூக்காவில் தாவர வேதிப்பொருட்கள் வணிக ரீதியாக சபோனின் ஆதாரமாக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு சபானின் போன்ற உடலியல் ரீதியாக செயல்பாட்டில் இருக்கும் தாவர வேதிப்பொருட்கள் இந்த செடியில் உள்ளது. ரிசர்வடால் உள்பட பாலி பீனாலிக் கூறுகள் மற்றும் யூக்கா ஏ, பி, சி மற்றும் டி போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குவிறது யூக்கா.
யூக்காவின் ஆரோக்கிய நன்மைகள் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், அழற்சியைக் குறைக்கவும் மற்றும் வலியைக் குறைக்கவும் தேவையான திறன் இந்த வற்றாத தாவரத்தில் உள்ளது. உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், ஒற்றைத் தலைவலி, நீரிழிவு, எக்சிமா, கீல்வாதம், வயிறு தொடர்பான பிரச்சனை, சரும தொற்று, பித்தப்பை மற்றும் கல்லீரல் கோளாறு போன்றவற்றின் சிகிச்சையில் யூக்கா பயன்படுவதாக இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கீல்வாதத்தைக் கட்டுப்படுத்த கீல்வாதம் மற்றும் இதர அறிகுறிகளுக்கான சிகிச்சையில் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவர்கள் யூக்காவைப் பயன்படுத்தியாக பல்வேறு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த தாவரத்தில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வலியை குறைக்க உதவுகின்றன. யூக்கா மாத்திரைகளில் பீனால் கூறுகள் அதிக அளவில் இருப்பதால், அழற்சி குறைவதோடு மட்டுமில்லாமல், செல்களுக்கும் திசுக்களுக்கும் தீங்கு உண்டாக்கும் கூறுகளை சமன் செய்ய உதவுகிறது. மூட்டு முடக்கு வாதம் அல்லது கீல்வாதம் போன்ற நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு யூக்கா சிறந்த நன்மைகளைத் தருகிறது. யூக்காவில் இருக்கும் சபோனின் மற்றும் தாவர வேதிப்பொருட்கள், உடலில் இருந்து வெளிப்படும் அழற்சி பண்புகளைக் குறைக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யூக்காவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகமாக இருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அதிக நன்மையைத் தருகிறது. மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படவும் இந்த தாவரம் நன்மையை அளிக்கிறது. உங்கள் உடலை நோய்த் தாக்காமல் பாதுகாக்க இது உதவுகிறது. கிருமிகள் மற்றும் தொற்று பாதிப்புடன் உடல் போராட உதவும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க இந்த தாவரத்தில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது. யூக்காவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட், அணு மாற்றம் மற்றும் ப்ரீ ரேடிக்கல்களால் உண்டாகும் சேதம் போன்றவற்றில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
இதய நோய் இதய மண்டலத்தின் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் ப்ரீ ரேடிகல் இடையே சமநிலை இன்மையைக் (விஷத்தன்மை அழுத்தத்தைக்) குறைத்து இதயத்தைப் பாதுகாப்பது இந்த தாவரத்தின் மிக முக்கிய நன்மையாகும். இந்த ப்ரீ ராடிகேல்கள், இதய நோய் மற்றும் புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களை ஊக்குவித்து இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். விஷத்தன்மை அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் சிறு தட்டணுக்கள் குவிப்பைத் தடுக்க உதவுகிறது யூக்கா. இதனால் ஒட்டுமொத்த இதய நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
உயர் கொலஸ்ட்ரால் அளவு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறப்பைப் பெற்றுள்ள யூக்கா தரும் மற்றொரு ஆரோக்கிய நன்மை, உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆகும். தாவர அடிப்படைக் கொண்ட ரசாயனமான ஸ்டீராய்டு சபோனின் கொண்ட யூக்காவை உட்கொள்வதால், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுகிறது, மற்றும் குடல் பகுதியில் கொலஸ்ட்ரால் உறிஞ்சுதல் தடுக்கப்படுகிறது. இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடிகிறது.
நீரிழிவை நிர்வகிக்க நீரிழிவு பாதிப்புள்ள எலிகளின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள இடையூறுகளைக் கட்டுப்படுத்துவதில் யூக்கா சிறந்த நன்மை புரிவதாக 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. மனிதர்கள் குறித்த ஆய்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை என்றாலும், யூக்கா மாத்திரைகள், நீரிழிவு பாதிப்பு கொண்ட நபர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக நம்பப்படுகிறது. இது க்ளுகோஸ் அளவை மிதமாகக் குறைப்பதன் மூலம், யூக்கா தாவரம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
விஷத்தன்மை செல்களில் உண்டாகும் ஒருவித சமநிலையின்மையை விஷத்தன்மை அழுத்தம் அல்லது ஆக்சிஜனேற்ற அழுத்தம் என்று கூறுவர். இந்த நிலை உடலுக்கு தீவிர சேதத்தை உண்டாக்குகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மேல், இந்த ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் பார்கின்சன் நோய், அல்சைமர் பாதிப்பு, இதய செயலிழப்பு மற்றும் இதர அழற்சி நிலைகள் போன்ற பாதிப்புகள் வளர்ச்சி அடையும் நிலை உண்டாகலாம். யூக்காவில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்கள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது என்பது பல ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படுகிறது.
யூக்காவின் இதர நன்மைகள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. தாவரத்தின் ஒளிக்கதிர் பண்புக்கூறுகள் சூரிய சேதத்திற்கு எதிராக பாதுகாப்புக் கவசமாக செயல்படுவதில் பயனளிக்கின்றன. மேலும் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகின்றன. அவை, . சரும தொற்று மற்றும் நோய்கள் . வெட்டு மற்றும் புண்கள் . பொடுகு . சுளுக்கு . மற்றும் முடி வழுக்கை யூக்காவில் உள்ள ஃபோலிக் அமிலம், கண் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.