Skip to main content

பொங்கல் ஸ்பெஷல் : பலகறிக் குழம்பு

பொங்கல் பலகறிக் குழம்பு

  1. காரட்
  2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு, 
  3. சேனைக்கிழங்கு
  4. கருணைக்கிழங்கு
  5. வாழைக்காய்
  6. நெல்லிக்காய்
  7. பூசணி 
  8. கத்தரிக்காய் 
  9. அவரைக்காய் 
  10. உருளைக்கிழங்கு
  11. பீன்ஸ்
  12. செள செள
  13. மொச்சைக் கொட்டை
  14. பச்சை பட்டாணி
  15. பரங்கிக்காய்
  16. கோவைக்காய்

  • துவரம் பருப்பு 
  • புளி தேவைக்கு, 
  • மஞ்சள்தூள்
  • நல்ல எண்ணெய்


வறுத்து அரைக்க:

  • பெருங்காயம்
  • கடலைப் பருப்பு 
  • தனியா
  • மிளகாய் வற்றல்
  • துருவிய தேங்காய்



தாளிக்க :

  • கடுகு 
  • சீரகம்
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி தழை
  • பச்சை மிளகாய்


    எப்படிச் செய்வது?




  • புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும். 
  • மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை அதன்படி நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • 3 மேசைக்கரண்டி எண்ணெயில் முறையே பெருங்காயம், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய் முதலியவற்றை தனித் தனியே சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கவும்.
  • காய்கறித்துண்டுகளை நீர் சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டவும்.
  • புளிக்கரைசலைக் கொதிக்கவிட்டு சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் பொடி செய்த கலவை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து போடவும். மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.




கமகமக்கும் பொங்கல் ஸ்பெஷல் குழம்பு ரெடி. விருப்பப்பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். எல்லா காய்கறிகளும் கிடைக்காவிட்டால் இருக்கும் காய்கறிகளை வைத்தும் இந்தக் குழம்பு செய்யலாம். முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் இதில் சேர்ப்பதில்லை.

பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடுங்கள்! பொங்கலோ பொங்கல்!!

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.