Skip to main content

நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்

நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்


  1. காலையில் இஞ்சி ,நண்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால் .வாதம் ,பித்தம் ,ஆகிய நோய்கள் இன்றி வாழலாம் .
  2. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும் ,இரவில் சீக்கிரம் உறங்குவதும் நோய் தீர்க்கும் அன்றாட நடை முறைகள் ஆகும் .
  3. ஒரு நாளைக்கு இருவேளை உணவு உண்டால் போதும். நினைத்த பொழுது எல்லாம் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் .
  4. பசித்து உணவு உண்ணவேண்டும் .சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பதும் நல்லது .
  5. மலம் ,ஜலத்தை உரிய நேரத்தில் வெளியிடமால் அடக்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது .
  6. புகையிலை சுருட்டு பொடி,முதலான தீய பழக்க வழக்கங்களை தவிர்ப்பதும் நல்லது .
  7. வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து இள வெந்நீரி ல் குளிக்க வேண்டாம் .மாதம் இரு முறை உண்ணா நோன்பையும் இருத்தல் நல்லது .

  8. கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெருந்தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் .
  9. அளவுக்கு அதிகமான உப்பு நோயைத் தருவாதகும் . உப்பு அது தப்பு என்பது இயற்க்கை மருத்துவர்களின் அறிவுருதலாகும் .
  10. காலையிலும் மாலையிலும் நடைப்பயிர்ச்சி மேற்கொண்டால் மருத்துவமனை நோக்கி நடப்பதை பெரும் அளவில் தவிர்க்கலாம் .
  11. உணவு வகைகளில் சோற்றைக் குறைவாகும் ,அதிகமாக கீரைகளையும் ,காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் .
  12. கீழ்க்கண்ட வேண்டாத மன உணர்வுகள் நீக்குவது நல்லது . காமம் ,பகை ,பிறர்க்கு உதவாமை,நான் என்னும் கர்வம் ,இருமணப் பெண்டிர் மீது பெரு விருப்பு, மனதளவில் விரதோம் ,பிறரை இகழ்தல் ,பொறமை .
  13. உணவுக்கு பின் வெற்றிலை ,பாக்கு,சுண்ணாம்பு ,சுண்ணாம்பு சேர்த்து கொள்வது நல்லது வெற்றிலை உணவை விரைவாக செரிக்க செய்யும் .பாக்கு நுரையிரலில் ஏற்படும் சளிதொல்லையை தீர்க்கும் .சுண்ணாம்பு எலும்புகளுக்கு வலிமை சேர்த்து குடல் நோய்களை குணப்படுத்தும் .
  14. அதிக அளவு நீர்,கீரை வகை உணவுகளும் ,பழவகைகளும் மலச்சிக்கலை தீக்கும் .
  15. நாட்பட்ட உணவை உண்ணக்கூடாது .
  16. நண்பகலில் தூக்கம் ,இரவில் விழித்துஇருத்தல் நோயை விருந்து வைத்து அழைப்தாகும்.
  17. தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது .
  18. காலையில் ஆசனம் , மாலையில் உடற்பயற்சி ,இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும் செய்ய பழக வேண்டும் .ஆசனப் பயிற்சி உடலின் உள் உறுப்புகளை நலம் பெறச் செய்யும் ,உடற் பயிற்சி உடலின் புற உறுப்புகளை வலுபெற செய்யும் ,தியானம் உள்ளதை தூயைமையகவும் ,மனதை தெளிவாகவும் செய்யும் .


Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.