கேழ்வரகில்  கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .
பாலில்  உள்ள கால்சியத்தை  விட  இதில் அதிகம் உள்ளன .
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .
நோய்  எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .
உடல் சூட்டை  தனிக்கும் .
குழந்தைகளுக்கு  கேழ்வரகுடன்  பால் ,சர்க்கரை  சேர்த்து  கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
தினம் கேழ்வரகு  கூழ்  சாப்பிட்டு வர குடற்புண்  குணமடையும் .
மாதவிடாய்  கோளாறு  கொண்ட பெண்கள்  இதை சாப்பிட்டு வர குணமடையும் .
கேழ்வரகு  சாப்பிட்டால் உடல் எடை குறையும் .
கேழ்வரகில்  உள்ள  நார்  சத்துக்கள் மலசிக்கலை  தடுக்கிறது .
இது  ஜீரணமாகும்  நேரம்  எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை
நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை  நோயாளிகள்  கேழ்வரகை  ,அடை ,புட்டாக , செய்து  சாப்பிடலாம் . கூழ்  அல்லது  கஞ்சியாக  சாப்பிடக்கூடாது .
இதில்  இரும்பு  சத்து அதிகம்  உள்ளது  இது இரத்த சோகை  நோய்  வரமால்  தடுக்கிறது .
இதில் அதிக அளவு  கால்சியம் ,இரும்பு  சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள்  தினம் உணவில் சேரத்து  கொள்ளலாம் .
குறிப்பு :  இதில் ஆக்ஸாலிக்  அமிலம்  அதிகம்  உள்ளதால் ,சிறுநீரக  கற்கள் உள்ளவர்கள்  இதை தவிர்ப்பது  நல்லது .