உடல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உயிர்ச்சத்துக்கும் ஒரு முக்கிய முன்நிபந்தனை. இது வழக்கமாக குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெறப்படுகிறது.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த புதிதாக பறிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், மற்றும் complex carbs -ன் உட்கொள்ளலை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும். ஆனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதை சாப்பிடுவதை விட சற்றே அதிகம் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் துணைபுரியும் கூடுதல் சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் பயன்பெறலாம். இத்தகைய கூடுதல் சப்ளிமென்ட்கள் டைப் - 2 நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலை நோயாளிகளுக்கு பயனளிக்கும்
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை சப்ளிமென்ட்கள், முழு இலவங்கப்பட்டை தூள் அல்லது இலவங்கப்பட்டையின் சாறிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. உடலில் உள்ள உயிரணுக்களை இன்சுலினுக்கு நன்றாக ஒத்துழைக்கும்படி செய்கிறது. இது உங்கள் செல்களில் சர்க்கரையை அனுமதிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் இலவங்கப்பட்டை உதவும்.
அலோவேரா
கற்றாழை (அலோவேரா) இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. அலோவேரா இலைகளால் செய்யப்பட்ட சப்ளிமெண்ட்ஸ் வேகமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். அலோவேரா, கணைய செல்களில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது எனக்கண்டறியப்பட்டுள்ளது.
வெந்தய விதைகள்
வெந்தயமா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் வெந்தயம் உண்மையில் உதவுகிறது . இது உங்களின் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் உறுஞ்சுதலை குறைத்து உடலில் உள்ள சர்க்கரை அளவுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது. அமினோ அமிலங்கள் மிகுதியாக இருப்பதால், இன்சுலின் உற்பத்தி தூண்டப்படலாம். வெந்தய விதைகள் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது
ஊறுகாய் ,சாக்லேட், பிஸ்கெட்,தேன், ஜாம் அல்லது சர்க்கரையைக் கூட வாயில் போட்டு சாப்பிடலாம்.
பழச்சாறோ அல்லது சர்க்கரை கலந்த நீரையோ பருக வேண்டும். தேவைப்பட்டால் 15 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை பருகலாம்.
சர்க்கரை நோயாளி சுயநினைவை இழக்கும்பட்சத்தில் பழச்சாறோ அல்லது சர்க்கரை கலந்த நீரையோ பருக வைக்க முயற்சிக்க வேண்டாம். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.