Skip to main content

துலாம் ராசி வருட ராசி பலன் 2019

தர்மநெறி தவறாமல் வாழ்வு நடத்தும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில்  குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை
வாங்கலாம். பகைவரின் சதி உங்களிடம் எடுபடாது. ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருப்பது சுமாரானது என்றாலும் அவரது பார்வைபலத்தால் முன்னேற்றம் அடைவீர்கள்.   சனிபகவான் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் வளர்ச்சி முகத்தைக் காண்பீர்கள். மொத்தத்தில் ஆண்டு முழுவதும் சந்தோஷச் சாரலில் சதிராட்டம் ஆடுவீர்கள்.

பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குருவாலும், பிற்பகுதியில் கேதுவாலும் பணவரவு வந்து கொண்டிருக்கும். அதன் மூலம் தேவையனைத்தும் பூர்த்தியாகும். அதே நேரம் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அனாவசிய செலவு ஏற்படலாம். எடுத்த செயலைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். ஆனாலும் அவ்வப்போது தடைகள் வரலாம். அதை குருவின் பார்வையால் முறியடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தம்பதியிடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.  மே 19க்கு பிறகு திருமணம் போன்ற சுபவிஷயங்கள் கைகூடும். அதுவும் மனதிற்குப் பிடித்த நல்ல வரனாக அமையும். 
கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.  புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர்.  வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். உறவினர்கள் அனுகூலமாக இருப்பர். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பணலாபம் அதிகரிக்கும். மார்ச் 13 முதல் மே19 வரை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறவினர் வகையில் நெருக்கம் வேண்டாம். 
சற்று ஒதுங்கி இருக்கவும். இந்த காலகட்டத்தில் சிலர் விடாமுயற்சியால் வீடு, மனை வாங்கலாம். அதற்காக கடன் வாங்கவும் நேரிடலாம். ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் கையில் அதிகப்பணம் புழங்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். 

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவியும் சிலருக்குத் தேடி வரும். வேலைப்பளு குறையும். 
விருப்பமான இடமாற்றம் கிடைக்கும்.  சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி  கிடைக்கும். மார்ச் 13 முதல் மே19 வரை சற்று வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.  ஆனால் மே19 ல் இருந்து அக்.26 வரை  நிலைமை உங்களுக்கு சாதகமாக அமையும்.  தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.



வியாபாரிகளுக்கு சனி மற்றும் குருவின் பலத்தால் தொழில் வளர்ச்சி உண்டாகும். போதிய வருமானம் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் வளம் காணலாம். எதிரிகளின் சதியை சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள்.

மார்ச் 13ல் இருந்து  மே19 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சலும் ஏற்படலாம். முயற்சிக்கு தகுந்த நன்மை கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு பணவிரயம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.  இந்த காலக்கட்டத்தில் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் ஓரளவு நன்மையை  எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அரசு வகையில் அனுகூலம் உண்டு.



கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள்  ஆதரவுடன் இருப்பர். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டு. அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர்.



கேதுவால் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து பிப்.13க்கு பிறகு விடுபடுவர். அதன் பிறகு படிப்படியாக நன்மை அதிகரிக்கும்.   



மாணவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். கடந்த ஆண்டை விட கூடுதல் மதிப்பெண் கிடைக்கப் பெறலாம். குரு சாதகமாக காணப்படுவதால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஆனால் மார்ச்13ல் இருந்து மே19 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். அப்போது குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.



விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். மஞ்சள், நெல், சோளம், கேழ்வரகு, கொள்ளு போன்ற பயிர்களில்  நல்ல வருமானம் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும்.   



பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர்.  சகோதரவழியில் நன்மை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் பெருமையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு.

பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி மூலம் நிதியுதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து  மே 19வரை சிக்கனமாக இருப்பது நல்லது. இருப்பினும் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.

உடல்நலம் சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான உபாதை மறையும். தாயாரின் உடல்நிலை மேம்படும்.



பரிகாரம்:



*  ராகுவுக்காக வெள்ளியன்று துர்க்கை வழிபாடு

*  குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை

*  சுவாதியன்று லட்சுமிநரசிம்மருக்கு நெய்தீபம்



பாடுங்க! பாடுங்க



பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்

வாயிலோர் ஆயிர நாமம்

ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்கு

ஒன்றுமோர் பொறுப்பிலனாகி

பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்

பிறையெயிற்று அனல்விழிப் பேழ்வாய்

தெள்ளிய சிங்கமாகிய தேவைத்

திருவல்லிக் கேணிக் கண்டேனே.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.