Skip to main content

தனுசு ராசி வருட ராசி பலன் 2019

ஆன்மிகத்தில் ஆர்வம் மிக்க தனுசு ராசி அன்பர்களே!   

ஆண்டின் தொடக்கத்தில் குருபகவானால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போய் விட வேண்டாம். குருபகவான் கெடுபலனை செய்யும் போது அது முடிவில் நன்மையாக இருக்கும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை
  குருபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். இதுவும் சிறப்பானதல்ல. அப்போது அவரால் கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவதுண்டு. குருபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வைகள் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு.

சனிபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்க நேரிடும். இருந்தாலும் சனி நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. மேலும் சனிபகவான் ஏப்.26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் கெடுபலன் தரமாட்டார்.  

ராகு, உறவினர் வகையில் பிரச்னைகளை உருவாக்கியிருப்பார். முயற்சியில் தடை ஏற்பட்டிருக்கும். பிப்.13ல் ராகு 7-ம் இடமான மிதுனத்திற்கு வருகிறார். இங்கு அவரால் இடப்பெயர்ச்சி, அவப்பெயரை சந்திக்கலாம். கேது, அரசு வகையில் பிரச்னை ஏற்படுத்திருக்கலாம். பொருள் திருடு போயிருக்கலாம். பிப்.13ல்  கேது உங்கள் ராசிக்கு வருவதும் சிறப்பான இடம் என சொல்ல முடியாது. அவரால் காரிய தடை, உடல் உபாதை ஏற்படலாம். மொத்தத்தில் சிரமப்பட்டாலும் கூட குருவின் பார்வை பலத்தால் விரைவில் தப்பி விடுவீர்கள். 

மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
பொருளாதாரம் சீராக இருக்கும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண் விரோதத்தை தவிர்க்கவும். மார்ச் 13 முதல்  மே 19 வரை குருவின் பார்வையால் கெடுபலன் உண்டாகாது. 

குடும்பத்தில் தம்பதியிடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. 
உறவினர் மத்தியில் மனக்கசப்பு ஏற்படலாம். சற்று விலகி இருக்கவும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். மார்ச் 13க்கு பிறகு குருவின் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். 
உறவினர் உதவிகரமாக இருப்பர். குருவின் 5-ம் இடத்துப்பார்வையால்  சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். 
பெண்களால் மேன்மை கிடைக்கும். மார்ச்,ஏப்ரல் மாதங்களில் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மே19ல் இருந்து அக்.26 வரை ஆடம்பரச் செலவை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் பிரச்னை வரலாம். எனவே அவர்கள் நடத்தையில் சற்று கவனம் தேவை. 

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வீண்அலைச்சலும் இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். உங்கள் கோரிக்கை நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். 
பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடலாம். மார்ச்13ல் இருந்து மே19 வரை சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். இருப்பினும் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் பின்தங்கிய நிலை மாறும். வேலைப்பளு படிப்படியாக குறையும். 
அதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அக்.15 முதல் நவ.15 க்குள் அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி  கிடைக்கும். 
நவம்பர், டிசம்பர் மாதங்களில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.  வியாபாரிகள் எவ்வளவோ முயன்றும் போதிய வருமானம் கிடைக்காமல் தவிப்பர். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். மார்ச் 13 முதல் தொழிலில்  வளர்ச்சியைக் காணலாம்.  கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் வளர்ச்சி பெறும். மே19ல் இருந்து அக்.26 வரை வாடிக்கையாளரை  தக்க வைக்க விடாமுயற்சி தேவைப்படும்.   

கலைஞர்கள் திறமைக்கு ஏற்ற நற்பெயரும், புகழும் கிடைக்காமல் வருந்துவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மறைமுகப் போட்டிகள் நிலவும். 
மார்ச் 13க்கு தட்டிப் பறிக்கப்பட்ட புகழ் கிடைக்கப் பெறுவர். கையில் பணம் புழங்கும். 

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். கடுமையான முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. இருப்பினும் மார்ச் 13க்கு பிறகு குருவின் பார்வையால்  முன்னேற்றம் காணலாம். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 

விவசாயிகள் சீரான மகசூலைக் காண்பர். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கில் முடிவு பாதகமாக அமைய வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்க அனுகூலம் இல்லை அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். மார்ச்13க்கு பிறகு  மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலும், வருமானமும் கிடைக்கும்.  

மே 19 ல் இருந்து அக்.26 வரை  சுமாரான பலன் கிடைக்கும். ஆனால் நவம்பரில்  கைவிட்டுப் போன சொத்து கிடைக்க வாய்ப்புண்டு. 

பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். மார்ச் 13க்குப் பிறகு குருபார்வையால் நினைத்தது நிறைவேறும். உறவினர் உதவிகரமாக இருப்பர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்கும்.  மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய வீடு-மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். 

மே19ல் இருந்து அக்.26 வரையில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அக்.15 முதல் நவ.15 வரை சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். உடல்நிலை அதிருப்தியளிக்கும்.

பரிகாரம்:

*  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
*  உத்திர நட்சத்திரத்தன்று சாஸ்தா வழிபாடு

பாடுங்க! பாடுங்க

பித்தராய் நினதுபுகழ் பேசித் திரிந்து 
நின்பெருமையை நினைத்துப் பாடிப்
பிதற்றுகின்றேன் நின்பெரும் கோயில்
எய்தினேன் பிழை பொறுத்தருள வருவாய்
தத்துவம் அனைத்தும் ஒரு முத்திரை 
உரைத்திட தந்த சத்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரி மாமலை வாசனே!

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.