Sunday, October 28, 2018

நோயின்றி வாழ இந்த சத்துக்களில் மூன்றையாவது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

சோடியம் இது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடலில் உள்ள அமிலத்தின் அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. ஆனால் இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளமால் இருப்பது நல்லது. ஊறுகாய், மோர், தர்பூசணி போன்ற உணவுகளில் சோடியம் அதிகம் உள்ளது.


பொட்டாசியம் பொட்டாசியம் எலெக்ட்ரோலைட் என்றும் அழைக்கப்படுகிறது, இது உடலுக்கு தேவையான புரோட்டின்களை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது அதேசமயம் கார்போஹைட்ரேட்டையும் சரியான அளவில் கிடைக்க உதவுகிறது. இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் அவசியமான சத்தாகும். உருளைக்கிழங்கு, தக்காளி, ப்ரோக்கோலி, ஆரஞ்சு போன்றவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

பாஸ்பரஸ் உங்கள் செரிமானம் சீராக இருக்க பாஸ்பரஸ்தான் முக்கியமான ஒன்று. மேலும் உங்கள் உடலில் ஹார்மோன்கள் சமநிலை அடையவும், எலும்புகள் வலிமையடையவும் இது அவசியம். பீன்ஸ், சோளம், பீனட் பட்டர் போன்ற உணவுகளில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.

ஜிங்க் ஜிங்கின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று, இது சளி, தொற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பெண்கள் கருத்தரிப்பதில் ஜிங்க் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த ஜிங்க் முந்திரி, சுண்டல், பட்டாணி, சிக்கன் போன்ற உணவுகளில் இது அதிகம் உள்ளது.

மக்னீசியம் ஆரோக்கியத்திற்கு முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து மக்னீசியம் ஆகும். மக்னீசியம் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை வழங்குகிறது மேலும் சீரான இதய ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. மக்னீசியம் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை தடுப்பதோடு இன்சுலின் அளவையும் சீராக்குகிறது. சாக்லேட், முந்திரி, பாதாம் போன்ற உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.

இரும்புச்சத்து இரும்புச்சத்து ஹீமோக்ளோபினின் அளவில் முக்கியப்பங்கு வகிக்கிறது, மேலும் இரத்தத்தில் இருந்து நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதும் இரும்புச்சத்துதான். உடலில் இரும்புச்சத்து குறைவது இரத்தசோகை, இரத்த இழப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். சுண்டல், பூசணி விதைகள், எள்,திராட்சை போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

அயோடின் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிற்கு அயோடின் சத்து மிகவும் அவசியமான ஒன்று. அயோடினின் அளவு குறையும்போது அது சோர்வு, மனஅழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு அளவுகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் தைராய்டு பிரச்சினையையும் ஏற்படுத்தும். இறால், உப்பு, வேகவைத்த முட்டை, ஸ்ட்ராபெரி, தயிர் போன்ற உணவுகளில் அயோடின் அதிகம் உள்ளது.

காப்பர் திசுக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான வகிக்கும் கொலாஜன் உருவாக்கத்தில் காப்பர் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் சீரான இதயத்துடிப்பிற்கும் இது அவசியமான ஒன்று. காளான், முந்திரி, அவோகேடா, பீன்ஸ் போன்ற உணவுகளில் இது அதிகம் உள்ளது.

கோபால்ட் வைட்டமின் பி12 வின் முக்கியமான பகுதியான இது கோபால்மின் என்று அழைக்கப்படுகிறது. நிபுணர்களின் கருத்துப்படி உடலின் சீரான இயக்கத்திற்கு சிறிதளவு கோபால்ட் மட்டுமே அவசியம். ஆனால் அதன் அளவில் கவனமாக இருக்க வேண்டும். முட்டை, பால், இறைச்சி, ப்ரோக்கோலி, கீரை போன்ற உணவுகளில் கோபால்ட் சத்து உள்ளது.

கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமானது என்று நாம் அறிவோம். உடலில் கால்சியத்தின் அளவு குறையும்போது அது எலும்புருக்கி நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மில்க், சீஸ், தயிர், கீரை மற்றும் சுண்டலில் கால்சியம் அதிகம் உள்ளது.