பொருட்கள் கெட்டு போக கூடாது என்பதற்காகவும், நீண்ட நாட்கள் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அற்புத இயந்திரம் தான் குளிர் சாதன பெட்டி (எ) ஃபிரிட்ஜ். ஆனால், நம் அதன்
பயன்பாட்டை கொஞ்சம் தவறுதலாக புரிந்து கொண்டு கண்டவற்றை அதனுள் சேமித்து வைத்து கொள்கின்றோம்.
இந்த செயல் ஒரு சில உணவின் தன்மையை முற்றிலும் மாற்ற கூடும். சில உணவை விஷத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றி விடும். அந்த வகையில் நம்மில் பலர் உருளை கிழங்கை ஃபிரிட்ஜில் வைக்கின்றோம். இது எப்படிப்பட்ட பேராபத்தை நமக்கு தரும் என்பதை இனி அறிவோம்.
புசுபுசு கிழங்கு..! உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாகவும் மென்மையாகவும் இருக்கும். இந்த உணவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் விரும்புவார்கள். இதை வைத்து சிப்ஸ், பிரெஞ்சு பிரிஸ், பப்ஸ் போன்ற பல பொருட்களை தயார் செய்து நாம் உண்ணலாம்.
ஃபிரிட்ஜில் உருளையா..? நாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவு பொருட்களில் உருளைக்கிழங்கு முதல் இடத்தில் உள்ளது. இதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் நன்மை ஒன்றும் ஏற்பட போவதில்லை. மாறாக பல தீமைகளே ஏற்பட கூடும் என ஆய்வுகள் சொல்கிறது. ஃபிரிட்ஜில் வைத்த உருளைக்கிழங்கு, புற்றுநோயை ஏற்படுத்தும்னு உங்களுக்கு தெரியுமா..!
வேதி வினையா..? நீங்கள் ஃபிரிட்ஜில் உருளைக்கிழங்கை வைத்தால் இதில் ஒரு பெரிய வேதி வினை நடக்க கூடும். குறிப்பாக இதில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரையாக மாறி விடும். பிறகு இந்த உருளைக்கிழங்கை எடுத்து சமைத்தால் அவ்வளவு தான். 250ºF என்ற வெப்பநிலைக்கு மேல் இந்த ஃபிரிட்ஜில் வைத்த உருளைக்கிழங்கை சமைத்தால் அமினோ அமிலமாக மாற கூடும்.
உருளைக்கிழங்கும் புற்றுநோயும்..! இந்த அமினோ அமிலமானது asparagine என்கிற வகையை சார்ந்தது. இவை acrylamide என்கிற மோசமான வேதி பொருளை உருவாக்கும். குறிப்பாக இது உங்களுக்கு புற்றுநோயை உடலில் ஏற்படுத்துமாம். இத்தகைய கொடியதாம் இந்த வேதி பொருள்.
ஆராய்ச்சியின் அதிர்ச்சி தகவல்..! இந்த வகை வேதி பொருளை பேப்பர், பிளாஸ்டிக்ஸ், கலர் டைகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்துவர். நாம் புகை பிடிப்பதால் ஏற்பட கூடிய வேதி பொருளில் இந்த acrylamide இருக்குமாம். இந்த வேதி பொருள் ஃபிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுகின்ற பிரெஞ்சு பிரைஸ், சிப்ஸ் ஆகியவற்றிலும் இருக்கும்.
அவ்வளவு ஆபத்தா..? இத்தகைய உருளைக்கிழங்கு அந்த அளவிற்கா ஆபத்தை தரும் என்கிற கேள்வி, இப்போது உங்களுக்குள் தோன்றி இருக்கும். இந்த acrylamide என்கிற வேதி பொருள் புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை நமது உடலில் உருவாக்குமாம். மேலும், இந்த வகை உருளைக்கிழங்கு சாப்பிடுவோருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
வேறு என்ன ஆபத்து உள்ளது..? ஃபிரிட்ஜில் வைத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், பல வகையான உறுப்புகளும் பாதிக்க கூடும். குறிப்பாக சிறுநீரகம், கருப்பை, குடல் போன்றவை பாதிக்க கூடும். அத்துடன் இந்த இடங்களில் புற்றுநோயும் ஏற்பட கூடும் என அமெரிக்க ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
எங்கே வைப்பது..? எல்லா வகையான உணவு பொருட்களையும் நாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் இது போன்ற ஆபத்துகள் தான் ஏற்பட கூடும். எனவே, உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.
அதிக வருத்தலா..? எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதிகமான வெப்பநிலையில் நாம் அதனை சமைத்து சாப்பிட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் விரைவிலே அழிந்து விடும். எனவே, உணவுகளை அதிகமாக வறுத்தோ அல்லது பொரித்தோ அதிகம் உண்ணாதீர்கள்.
ஃபிரிட்ஜிற்கு நோ நோ..! ஃபிரிட்ஜில் மேலும் பல உணவு பொருட்களை நாம் வைக்க கூடாது. குறிப்பாக வெங்காயம், பூண்டு, தேன், அவகேடோ, தக்காளி, பிரட் போன்ற பொருட்களை ஃபிரிட்ஜில் அடுக்கி வைத்து கொள்ள கூடாது. இவற்றையெல்லாம் வெளியில் வைத்தே நாம் பயன்படுத்த வேண்டும்.