நமது உடலின் ஆரோக்கியத்திற்கு உணவு என்பது மிகவும் முக்கியமானது. உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் வழங்குவது ஆரோக்கிய உணவுகள்தான். அந்த வகையில் நம் உடலுக்கு கேடுகளை விளைவிப்பதும் இந்த உணவுகள்தான். ஆரோக்கியமான உணவுகள் கூட தரமற்ற முறையிலோ அல்லது
தவறான முறையிலோ சமைக்கும்போது அது ஆரோக்கியமற்ற உணவாக மாறிவிடும்.
தவறான முறையிலோ சமைக்கும்போது அது ஆரோக்கியமற்ற உணவாக மாறிவிடும்.
பொதுவாக வெளியிடங்களில் சாப்பிடுவதால்தான் எடை அதிகரிக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் வீடுகளில் நாம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளாலும் நமது உடல்எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பதிவில் நீங்கள் சமைக்கும்போது செய்யும் எந்தெந்த தவறுகளால் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை பார்க்கலாம்.
அதிக எண்ணெய் உபயோகிப்பது
உணவு தயாரிக்கும் போது எண்ணெய் உபயோகப்படுத்துவது அடிப்படையான ஒன்று, இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. உபயோகப்படுத்தும் எண்ணெய் மற்றும் தரம் இரண்டும் எப்போதும் முக்கியமானவை. பெரும்பாலான சமையல் எண்ணெய்கள் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், கொழுப்பை குறைப்பதற்கும் பயன்படுகிறது. ஆனால் அது சரியான அளவில் பயன்படுத்தும்போது மட்டும்தான்.
தவறான சாஸ்
கடைகளில் விற்கப்படும் சாஸ்களை உபயோகப்படுத்தும்போது அது உங்கள் உடலில் கொழுப்பின் அளவை மிகஅளவில் அதிகரிக்கிறது. நிபுணர்களின் கருத்துப்படி சாஸ்களை உபயோகிக்க சிறந்த வழி வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதுதான். ஏனெனில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சாஸ்களில் அதிகளவு இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. சுவையூட்டிகள் உணவின் சுவையை அதிகரிக்க நீங்கள் சேர்க்கும் சர்க்கரை மற்றும் உப்பு போன்றவைதான் உங்கள் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் உணவில் அதிகளவு சர்க்கரை மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்ப்பதை தவிர்க்கவும் அதுதான் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
அதிகளவு வறுப்பது
உணவை சமைக்கும் முறை மிகவும் முக்கியமானது அதனை பொறுத்துதான் நமது ஆரோக்கியம் அமையும். நிபுணர்களின் கருத்துப்படி உணவை அதிக நேரம் ஊறவைப்பதும், அதிகமாக வறுப்பதும் உணவில் உள்ள சத்துக்களை குறைப்பதோடு உணவை விஷமாக மாற்றக்கூடிய வாய்ப்பும் உள்ளது. MOST இது அதிகமாக சமைப்பது உணவின் சுவையை அதிகரிப்பதற்காக அதனை
அதிக நேரம் சமைப்பது
அதில் உள்ள சத்துக்களை குறைக்கும், இதனால் உணவு சுவையானதாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது. உணவுகளை மென்மையாகவும், வேகும்வரை மட்டும் சமைத்தால் போதும்.
அலங்கார பொருட்கள்
உணவின் மீது அலங்கார பொருட்களை பயன்படுத்துவது சாதாரண உணவை கூட அழகான உணவாக மாற்றக்கூடும். ஆனால் இந்த பொருட்கள் உணவை ஆரோக்கியமற்ற உணவாக மாற்றக்கூடும். சீஸில் தொடங்கி சாஸ் வரை ஆரோக்கியமற்ற அலங்கார பொருட்கள் ஏராளம். எனவே நீங்கள் பயன்படுத்தும் அலங்கார பொருட்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
சமைக்கும்போது சாப்பிடுவது
சமைக்கும்போது பாதியில் சாப்பிடுவதை உங்கள் அம்மா தடுப்பார்கள் அது ஐதீகம் என்று நீங்கள் எண்ணலாம் ஆனால் அதில் ஆரோக்கியமும் உள்ளது. சமைக்கும்போது இடையில் சாப்பிடுவது உங்கள் உணர்வுகளை குழப்பும் இதனால் உங்கள் மூளை தவறான சிக்னல்களை அனுப்பும், இது உணவு செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவு என்னவென்றால் எடை அதிகரிப்பு.
பிளாஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பது
பிளாஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பது என்னும் போது நமக்கு முதலில் நினைவிற்கு வருவது மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதுதான். நிபுணர்களின் கருத்துப்படி பிளாஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும்போது அது உங்கள் உணவில் ஆரோக்கியமற்ற இரசாயனங்களை உருவாக்கும். பொதுவாக மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது, அப்படியே சமைத்தாலும் தரமான பிளாஸ்டிக் பாத்திரத்தில் மட்டும் சமைக்கவும்.