உங்கள் மொபைல் போன் தொலைந்தால் ஈசியாக கண்டுபிடிக்கலாம்.
மொபைல் போன் என்பது மிக எளிய முறையில் திருடுபோகும் ஒரு பொருள்.
நமது உடைகளில் உள்ள பைகளில் இருந்தோ அல்லது கைப்பையில் இருந்தோ கைதேர்ந்த திருடர்களுக்கு மொபைல் போனை திருடுவது என்பது எளிதான விஷயமாக உள்ளது..
ஆனால் அதே நேரத்தில் திருடு போன மொபைல் போனை கண்டுபிடிப்பது என்பதும் சாதாரண விஷயம் இல்லை.
திருடப்பட்ட மொபைல் உடனடியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு பின்னர் அதன் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டால் அந்த மொபைல் போனை போனுக்கு உரியவர் மறந்துவிட வேண்டியதுதான்.
ஆனால் நாம் எச்சரிக்கையாக இருந்தால் நம் மொபைல் போனை ஈசியாக கண்டுபிடிக்கலாம்.
ஆம் உண்மைதான்
நம் மொபைல் எங்கு இருக்கு live location
நம் போனை வைத்து இருப்பவர் யார் அவரது போட்டோ
அனைத்தும் நம் மெயில் ஜடிக்கு வந்து விடும்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் மொபைல் போனில் McAfee security என்ற செயலியை இன்ஸ்டால் செய்யவேண்டும்
*ஆப் இன்ஸ்டால் செய்ய*
இந்த செயலியில் போனை மூன்று முறைக்கு மேல் தவறான பேட்டர்ன் (pattern)ஐ பயன்படுத்தினால் உடனடியாக செல்பி எடுத்து உங்கள் இமெயில்லுக்கு அனுப்பிவிடும்.
அதுமட்டுமில்லை உங்கள் போன் இருக்கும் இடத்தையும் நேரத்தையும் தெரிவித்துவிடும்.