
1) செம்பருத்தி இலைகள் நம் உடலுக்கு அதிக குளிர்ச்சியை தருகிறது மேலும் உடல் உஷ்ணத்தை குறைத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
2) செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி அந்த எண்ணையை முடியில் தடவி வந்தால் முடி கருமையாக நன்கு வளர தொடங்கும்.
3) சிறுநீர் போகும் போது சிலருக்கு எரிச்சல் வரும். அவ்வாறு இருப்பவர்கள் 4 செம்பருத்தி இலைகளை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவந்தால் சிறுநீர் கடுப்பு பிரச்சனை தீரும்.
4)மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் செம்பருத்தி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி காலை மற்றும் இரவு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.
5) இதய நோயாளிகள் செம்பருத்தி இலைகளை பொடியாக்கி அதைபாலுடன் கலந்து குடித்து வர இதயம் பலம் பெரும்..
செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் காரணமாக தான் இந்த செடி அனைவராலும் அதிகம் விரும்பி வளர்க்கப்படுகிறது.