Skip to main content

குழந்தையை குளிக்க வைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த கு
ழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
* தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.

* தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.

* குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.

* பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.

* குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. 

* குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.

* குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.

* வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான  சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

* குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின்  ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.

* குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

– மேலே கூறிய இந்த முறைகளை பின்பற்றி பிறந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.