பார்ப்பதற்கு கொஞ்சம் கரடுமுரடாகத் தெரிந்தாலும், இனிய மணமும் சுவையும் கொண்டது அன்னாசிப் பழம். அனேக ஆரோக்கிய நன்மைகளையும் அன்னாசிப் பழம் அள்ளித் தருகிறது.
குறிப்பாக, அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம்,
கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன.
அன்னாசிப் பழத்தில் உள்ள தாதுச் சத்துகள் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்கின்றன.
அன்னாசியில் கொழுப்புச் சத்துகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால், பித்தக் கோளாறுகள், செரிமானக் கோளாறுகள், உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றைத் தடுக்கிறது. தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது.
பொதுவாக உடல் பருமன் அதிகமாக உள்ள சிலருக்கு தொப்பை பெரிதாகக் காணப்படும்.
அந்தத் தொப்பையைக் குறைப்பதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் நினைத்த பலன் கிட்டாமல் வாடிப்போய் இருப்பார்கள்.
அவர்கள் தமது தொப்பையைக் கரைக்க அன்னாசிப் பழம் உதவும். அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையத் தொடங்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.