Skip to main content

கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

தேவையானப்பொருட்கள்:

கோதுமை ரவா – 1 கப்

பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் பொடித்தது – ஒன்றரை கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு – சிறிது
காய்ந்த திராட்சை – சிறிது
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* வெறும் வாணலியில், கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்து குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும்.

* ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.

* கோதுமை ரவை இனிப்பு பொங்கல் ரெடி.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.