Sunday, June 26, 2016

இந்த உணவுகள் ஏன் இந்த நாடுகளில் தடை செய்யப்பட்டன என்று உங்களுக்கு தெரியுமா?

பெரும்பாலும் இந்த உணவு பண்டங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது



சமோசா - சோமாலியா இந்தியாவில் மிக சாதாரணமாக கருதப்படும் சமோசா, சோமாலியாவில் தடைசெய்யப்பட்ட உணவாகும். முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குடிப்பது போன்று இருப்பதாலும், இஸ்லாம் மதத்திற்கு இது இணக்கமற்றதாக கருதப்படுவதாலும், சமோசா தடைசெய்யப்பட்டுள்ளது.



கெட்சப் - பிரான்ஸ் பிரான்ஸ் நாட்டின் ஆரம்ப பள்ளிகளில் கெட்சப் தடைசெய்யப்பட்ட பொருளாகும். இது குழந்தைகள் மத்தியில் ஓர் அடிக்ஷனாக இருக்கிறது. அனைத்திற்கும் இதை சேர்த்துக் கொள்கின்றனர். இதை கலாச்சார அபாயமாக கருதி தடை செய்துள்ளனர். 
?


கிண்டர் எக் - அமெரிக்கா அமெரிக்காவில் கிண்டர் எக் தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக திகழும் இதில் பொம்மைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த உண்ணக் கூடாத பொருள் உள்ளே இருப்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தவறுதலாக பிளாஸ்டிக் பொருளை உண்டுவிடக் கூடாது என்பதற்காக அமேரிக்கா இதை தடை செய்துள்ளது.

சூயிங்கம் - சிங்கப்பூர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சூயிங்கம் மெல்வது சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்படாமல் யாரும் சூயிங்கம் மெல்லக் கூடாது. மீறினால், 500 டாலர் அபராதம். சிங்கப்பூரின் அடையலாமே சுத்தம் தான், அதை இது கெடுக்கிறது என்பதற்காக தான் இந்த தடை.



பாங்கு - உலகின் ஏனைய இடங்களில் கஞ்சா கலந்து விற்கப்படும் பாங்கு இந்தியா மட்டுமின்றி, உலகின் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.









பாதாம் - கலிபோர்னியா கலிபோர்னியாவில் பச்சை பாதாம் விற்க தடை. சால்மோனெல்லா (salmonella) எனும் பாக்டீரியா பாதிப்பு உண்டாக இது காரணமாக இருப்பதாலும், இதனால், அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படுகிறது என்பதாலும் பச்சை பாதாம் விற்பதை தடை செய்துள்னர்.





பி.வி.ஓ (BVO) - ஐரோப்பியா பெரும்பாலான காற்றோட்டமுள்ள சிட்ரஸ் ட்ரிங்க்ஸ்களான மவுண்டன் டியூ போன்றவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருளான பி.வி.ஓ நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருளாகும். பி.வி.ஓ அதிகளவில் சேர்வது, ஞாபக சக்தி இழப்பு, மயக்கம், கவன குறைபாடு போன்ற பக்கவிளைவுகள் உண்டாக்க கூடியது ஆகும்.




பச்சை பால் - அமெரிக்கா பச்சை பால் அமெரிக்காவின் 22 மாகணங்களில் தடை செய்ப்பட்டுள்ளது. ஆனால், இது ஐரோப்பிய, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் பொருளாகும்.







ஜெல்லி ஸ்வீட்ஸ் - ஐரோப்பிய ஜெல்லி ஸ்வீட்ஸ் ஐரோப்பிய கண்டங்களில் தடை செய்யப்பட்ட பொருளாகும். இவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.