Sunday, May 22, 2016

டெலிகிராமில் செய்தி பெருனரை சென்றடைந்த பின்னரும் “Delete” செய்து கொள்ளலாம்:



டெலிகிராம் என்பது என்பது ஒருவருக்கு ஒருவர் செய்திகளை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு குறுந்தகவல் செயலியாகும். இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளுகையில் அனுப்புனர் ஒருவரால் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் பெருனரை சென்ற பிறகும் “delete ” செய்து கொள்ளலாம். 

இது தனி மற்றும் குழு கலந்துரையாடல் போன்ற அனைத்திற்கும் ஆதரவளிக்கும். அதாவது பெறுனருக்கு அனுப்பிய செய்தி ஒன்றினை அனுப்பிய பிறகும் edit செய்து பின் மாற்றி மீண்டும் “ReSubmit” செய்து கொள்ளலாம். பெருனரை சென்றடைந்த பின்னரும் குறுந்தகவல்கள் நீக்கப்படுமாகையால் தவறுதலாக அனுப்பப்படும் தகவல்களை எளிதில் நீக்கி விடலாம். 

இது முக்கியமான குறுந்தகவல் செயலிகளான வாட்ஸ் அப், பேஸ்புக் மெசேஞ்சர் போன்றவற்றில் இதுவரை அறிமுகபடுத்தப்படாத ஒன்றாகும். வரும்காலத்தில் அனைத்து குறுந்தகவல் செயலிகளிலும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.