Wednesday, May 11, 2016

பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.??

ஸ்மார்ட்போன்கள் குறித்து நம் அனைவருக்கும் அதிகமாகவே தெரியும். ஆனால் அதனுள் இருக்கும் ஒரு அங்கம் சார்ந்த தகவல்கள் மட்டும் இன்றும் குழப்பம் மிகுந்தவையாக இருக்கின்றது. போன் இயங்க மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் பேட்டரி குறித்து ஒவ்வொருத்தரும் பல தகவல்களை கூறி அனைவரையும் குழப்பி விடுகின்றனர்.

ஆனால் நீங்கள் குழம்ப வேண்டிய அவசியம் இல்லை. போனின் பேட்டரிக்கு பாதிப்பில்லாமல் அதனினை சார்ஜ் செய்யும் வழிமுறைகளை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

சார்ஜ்

முடிந்த வரை கருவியினை 50%க்கும் அதிகமாக சார்ஜ் செய்திருத்தல் நல்லது. பேட்டரி எப்பவும் 50%க்கும் அதிகமாக இருக்கும் போது அதன் வாழ்நாள் அதிகரிக்கும்.

பிரான்ட்

நீங்கள் சார்ஜ் செய்யும் கருவியுடன் வழங்கப்பட்ட சார்ஜரை பயன்படுத்தி கருவியை சார்ஜ் செய்ய வேண்டும். மற்ற பிரான்ட் சார்ஜர்கள் உங்களது கருவிக்கு அதிகளவு அல்லது குறைவான அளவு மின்சாரத்தை வழங்கும் போது அதன் பேட்டரி சீக்கிரம் பாழாகி விடும்.

சார்ஜ்

புதிய கருவிகளை வாங்கியவுடன் கருவியை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் என பலரும் கூறுவர். ஆனால் இதற்கு அவசியம் இல்லை. கருவியின் பேட்டரி தீரும் போது அதனினை சார்ஜ் செய்தாலே போதுமானது.



நேரம்

முடிந்த வரை கருவியை சார்ஜ் செய்யும் போது அதிக நேரம் சார்ஜரில் வைப்பதை திவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சார்ஜ் செய்யும் போது கருவி சூடாகும், இதனால் பேட்டரி சீக்கிரம் பாழாகி விடும்.

குளிர்ச்சி

போனினை எப்பவும் குளுமையாக வைத்து கொள்ள வேண்டும். பேட்டரியை சீக்கிரம் பாழாக்குவதில் சூடு தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. கருவி சூடாக இருந்தால் அதன் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும். மேலும் பேட்டரி விரைவில் பாழாகவும் செய்யும்.