Skip to main content

‘யாராலும் ஊடுறுவ முடியாது’ பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!

இனி உங்கள் மெசேஜ்களை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது!


வாரத்திற்கு ஒரு அப்டேட் தட்டிக் கொண்டே இருக்கிறது வாட்ஸ் ஆப். அதே போன்ற ஒரு அப்டேட் தான் சமீபத்தில் வந்துள்ளது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான மற்றும்
பாதுகாப்பான அப்டேட். நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.





நாம் அனுப்பும் மெசேஜ், “பப்ளிக் கீ” மூலமாக என்க்ரிப்ட் (குறியீடுகள் மூலம் மறைக்கப்பட்டு) செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடைகிறது. வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவேட் கீ இல்லாததால், நாம் அனுப்பும் மெசேஜினை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் பார்க்க முடியாது. வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து, நம் நண்பர்களிடம் சென்றடையும் மெசேஜ், நம் நண்பரிடம் இருக்கும் ‘ப்ரைவேட் கீ’ யால் டீக்ரிப்ட் செய்யப்படுகிறது. இதனால் நம் நண்பர்களால் அந்த மெசேஜினை பார்க்க முடிகிறது.


எழுத்து, புகைப்படம், வீடியோ என எதையுமே அனுப்புனர் மற்றும் பெறுநரைத் தவிர, வேறு யாராலும் பார்க்க முடியாது. அரசாங்கத்தால் கூட. இந்த தொழில்நுட்பத்தால், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் மெசேஜ்களை கண்டு பிடிக்க முடியாது என சில அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் வாட்ஸ் ஆப், தனது பயனர்களின் தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்க விரும்புகிறது

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.