ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் செயலியாக காணப்படும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காக சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.
அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தடித்த மற்றும் வளைந்த எழுத்துக்கள் மூலம் செட் செய்யும் வசதியை குறிப்பிடலாம்.
இவ்வாறு பயனுள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது வாட்ஸ்அப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சிறந்ததொரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது வாட்ஸ்அப் என்க்ரிப்சன் எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
என்க்ரிப்சன் என்றால் என்ன?
என்க்ரிப்சன் எனப்படுவது, நாம் குறித்த ஒருவருக்கு அனுப்பும் செய்தி வெறும் டெக்ஸ்ட் வடிவத்திலேயே செல்லாமல், இரகசிய குறியீடுகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுவதாகும்.
ஆகவே குறித்த செய்தி ஒன்றை நாம் மற்றுமொருவருக்கு அனுப்பும் போது, அந்த செய்தி குறித்த நபரை சென்றடையும் வரை யாராலும் ஹேக் செய்து தெரிந்து கொள்ள முடியாது.
உதாரணமாக நாம் எமது வாட்ஸ்அப் மூலம் எமது நண்பர் ஒருவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும் போது, குறித்த மெசேஜ்-ஐ நடுவில் இருந்து யாரேனும் ஹேக் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறித்த ஹேகர், எமது மெசேஜ்-ஐ ஹேக் செய்து விட்டால், நேரடியாக அவரால் எம்முடைய மெசேஜ்-ஐ வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் எமது மெசேஜ் என்க்ரிப்சன் செய்யப்படுவதால், எமது மெசேஜ்-ஐ யாரேனும் ஹேக் செய்தாலும் அவர்களால் குறித்த மெசேஜ் என்ன என்று வாசித்து தெரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால், எம்முடைய மெசேஜ் வெறும் எழுத்துகளாக இல்லாமல் சிறப்பு குறியீடுகளாக காணப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.
இந்த என்க்ரிப்சன் வசதியை தான், தற்போது வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு வாட்ஸ்அப் மெசேஜ்-உம் சிறந்ததொரு பாதுகாப்பு முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதியை பெற்றுக்கொள்வது எப்படி?
இந்த வசதியை உங்களது வாட்ஸ்அப் கணக்கில் செயற்படுத்த, உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்திடுங்கள்.
அப்டேட் செய்ததும், உங்களுடைய வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Account என்பதில் Security என்பதை தெரிவு செய்யுங்கள்.
.
இந்த மெனு-வில் உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புக்களை (கால்) என்க்ரிப்ட் செய்வதற்கான வசதி காணப்படும்.
ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்-உம் என்க்ரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படும்.
இதுவரை வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி உள்ள வசதிகளில், இந்த புதிய வசதி மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.