கணணிகளை பயன்படுத்தும் நாம் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக கணணி மந்தமாக தொழிட்படுவதை கூறலாம். குறித்த ஒரு கணணி மிகவும் மெதுவாக செயற்படுகிறது என்றால், இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக குறித்த
கணனியில் இருக்கும் ரேம் அளவு போதாமல் இருக்கலாம். அல்லது கணனியில் வைரஸ்-கள் காணப்படுதல் என்று பல்வேறுபட்ட காரணிகள் இருக்கின்றன.
ஆகவே இந்த முறை மூலம் ஓரளவிற்கு உங்களது கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
இவை தவிர அடுத்து கணணி மெதுவாக செயட்படுவதட்கு மிக முக்கிய ஒரு காரணியாக கணனியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்-ஐ குறிப்பிடலாம்.
அதாவது ஹார்ட் டிஸ்க்-இல் தங்கி இருக்கும் தேவையில்லாத பைல்-கள், ஹர்ட் டிக்ஸ்-இல் காணப்படும் மென்பொருட்களுடன் சமந்தப்பட்ட பிழைகள் என்று பல்வேறு காரணிகளால் கணனியின் ஹார்ட் டிஸ்க் மெதுவாக செயற்பட்டு கொண்டு இருக்கலாம்.
ஆகவே கணனியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்-ஐ சீராக பராமரிப்பதன் மூலம் கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
விண்டோஸ் கணனிகளின் ஹார்ட் டிஸ்க்-ஐ பராமரிக்க இணையத்திலே பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் விண்டோஸ் இயங்குதளத்துடனேயே வந்த ஹார்ட் டிஸ்க்-ஐ பராமரிப்பதட்கான வசதி பற்றி பெரும்பாலானோர் தெரிந்து வைத்ததில்லை.
ஆகவே இன்றைய பதிவில் எந்தவிதாமான மென்பொருளும் இல்லாமல் கணனியின் ஹார்ட் டிஸ்க்-ஐ எப்படி சீராக வைத்து கணனியின் வேகத்தை சரி செய்து கொள்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக உங்களது கணனியில் C டிரைவ்-ஐ ரைட் கிளிக் செய்து Properties என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில் டூல்ஸ் என்பதை தெரிவு செய்யுங்கள்.
அதிலே Error Checking என்று இருப்பதில் Check now என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே படத்தில் காட்டியிருப்பது போல் டிக்-ஐ செயற்படுத்தி Start என்பதை கிளிக் செய்து கணனியின் ஹார்ட் டிஸ்க்-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.
இந்த ஸ்கேன்-ஐ நீங்கள் Schedule செய்வதன் மூலம் கணணி அடுத்த முறை ஆரம்பிக்கும் போதும் கூட ஸ்கேன் செய்து கொள்ளும் வகையில் அமைத்து கொள்ள முடியும்.
ஆகவே இப்போது உங்களது கணனியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க் ஸ்கேன் செய்யப்பட்டு ஹார்ட் டிஸ்க்-இலே இருக்கும் தேவையில்லாத பைல்-கள், பிழை செய்திகள் என்று அனைத்தும் சீராக்கப்பட்டு உங்களது கணணி சிறப்பாக செயற்படும்.