Skip to main content

வாழைப்பூ துவையல்

நீரிழிவு நோய்க்கும், சிறுநீரக கல்லுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து. வாழைப்பூ மாதவிடாய் பிரச்சினைக்கும் சிறந்த மருந்து. இந்த வாழைப்பூத் துவையலில் துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என்ற ஐச்சுவை உள்ளது. 




தேவையானப் பொருள்கள்:


  • வாழைப்பூ - ஒன்று
  • புளி - எலுமிச்சையளவு
  • கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் - 3
  • தேங்காய் - ஒரு கைப்பிடி
  • எண்ணெய் - வதக்க
  • தாளிக்க:
  • கடுகு, கறிவேப்பிலை


செய்முறை:


  • மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • பின்பு அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.
  • வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • பின்னர் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவை உள்ள வாழைப்புத்துவையல் ரெடி. இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.