Wednesday, April 6, 2016

ஆன்ராயிடு போன் மூலம் போட்டோ ஒன்றில் இருக்கும் பின்புலத்தை நீக்குவது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான மற்றுமொரு மிக முக்கியமான பதிவொன்ருடன் இன்று உங்களை சந்திக்கின்றேன். அதாவது உங்களது போட்டோவில் இருக்கும் பின்புலத்தை உங்களது ஆன்ராயிடு போனில் இருந்த படியே மிக இலகுவாக நீக்கி கொள்வது எப்படி என்பதாகும்.



ஆனால் இன்று பலபேர் தமது ஸ்மார்ட் போன் மூலம் போட்டோகளை சமூக வலைத்தளங்களுக்கு பதிவேற்றுவதால், இன்றைய பதிவிலே மிக இலகுவான முறையில் உங்களது ஆன்ராயிடு போனில் இருந்தபடியே உங்களது போட்டோகளில் இருக்கும் பின்புலத்தை நீக்கி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

போட்டோகளில் இருக்கும் பின்புலத்தை நீக்க கூகுள் ப்லே ஸ்டோரில் பல்வேறு செயலிகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றிலே பெரும்பாலான செயலிகள், பயன்படுத்துவதட்கு சற்று கடினமான முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்தி கொள்ள கூடியாவாறு வடிவமைக்கப்பட்டுள்ள சில சிறந்த செயலிகளை பற்றி பார்ப்போம்.

உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து மிக இலகுவான முறையில் குறித்த போட்டோ ஒன்றில் இருக்கும் பின்புலத்தை நீக்கி கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள ஆன்ராயிடு செயலி உதவுகிறது.

'பின்புல அழிப்பான்' எனப்படும் இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்றோ, அல்லது கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்தோ தரவிறக்கி கொள்ள முடியும்.





இந்த செயலியை உங்களது போனில் நிறுவியதும், இதை எப்படி பயன்படுத்துவது என்ற விளக்கம் வழங்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.








இந்த செயலிக்கு அடுத்தபடியாக உங்களது போட்டோ ஒன்றில் இருக்கும் பின்புலத்தை நீக்கி கொள்ள கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் சில சிறந்த செயலிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.










ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள ஆன்ராயிடு செயலிகள் மூலம் மிக இலகுவாக உங்களது போட்டோ ஒன்றில் இருக்கும் பின்புலத்தை நீக்கி, உங்களுக்கு தேவையான ஒரு பின்புலத்தை மாற்றி கொள்ள முடியும்.