Skip to main content

போனை யாராவது Unlock செய்ய முயற்ச்சித்தால் அவரை போட்டோ எடுக்கும் செயலி

உங்களது போனை யாராவது Unlock செய்ய முயற்ச்சித்தால் அவரை போட்டோ எடுத்து விடுகிறது இந்த செயலி. (ஆன்ராயிடு)

இன்றைய பதிவில் உங்களுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போன் பாதுகாப்பு சம்மந்தமான ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன். ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் நாம் எமது போனில் கட்டாயமாக செயற்படுத்தி இருக்கும் ஒரு வசதி தான், ஸ்மார்ட் போன்களை அனலொக் செய்வதற்கான கடவுச்சொல் ஒன்றை வைத்து இருப்பது ஆகும்.

ஸ்மார்ட் போன் ஒன்றை அன்லொக் செய்வதற்கான கடவுச்சொல் பல்வேறு காரனங்களுக்காக எமக்கு தேவைப்படுகிறது. உதாரணமாக எமது ஸ்மார்ட் போனை வீட்டிலோ அல்லது வேறு இடங்களிலோ வைத்து விட்டு போனால், வேறு யாரும் எமது ஸ்மார்ட் போனில் இருப்பதை பார்க்காமல் இருக்க அல்லது துரதிஷ்டவசமாக எமது போன் தொலைந்து போனால், வேறு ஒருவர் எமது போனில் இருக்கும் பைல்-களை பார்க்காமல் தடுக்க என்று பல்வேறு காரணங்களுக்காக ஸ்மார்ட் போனுக்கான பாஸ்வோர்ட் முக்கியம் பெறுகிறது.







ஆனால் நாம் எமது போனை சார்ஜ்-இல் போட்டு வைத்து விட்டு வேறு எங்கு சரி சென்றாலோ அல்லது வீட்டில் வைத்து விட்டு வெளியில் செல்லும் சந்தர்ப்பத்தில் எமது ஸ்மார்ட் போனை யாராவது எடுத்து அன்லொக் செய்ய முயற்ச்சிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.


குறிப்பிட்ட நபருக்கு எமது ஸ்மார்ட் போனின் பாஸ்வோர்ட் தெரியாது என்பதால், அவர் ஒரு சில முறைகள் எமது போனை அன்லொக் செய்ய முயற்ச்சித்து விட்டு பின்னர், போனை இருந்த இடத்திலேயே வைத்து விடலாம். நாம் மறுபடியும் வந்து பார்த்தால், எமது போன் எந்த விதமான மாற்றவும் இல்லாமல் அப்படியே இருக்கும். ஆனால் நாம் இல்லாத போது நடந்த திருட்டு முயற்சி நமக்கு கடைசி வரை தெரிய வராது.

இனி அந்த கவலை வேண்டாம். எமது ஸ்மார்ட் போனை யாரவது எமக்கு தெரியாமல் அன்லொக் செய்ய முயற்ச்சித்தால் மிக இலகுவாக யார் எமது போனை அன்லொக் செய்ய முயற்ச்சித்து இருக்கிறார்கள் என்று அவர்களது போட்டோவுடன் தெரிந்து கொள்ள முடியும்.


எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.

இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.

இதன் செட்டிங்க்ஸ்-இல் காணப்படும் Security Settings என்பதை ON செய்து விடுங்கள்.








அடுத்து Show intruders.. என்பதையும் On செய்து விடுங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்களது போனை யாரவது அன்லொக் செய்ய முயற்சித்து போனுக்கான பாஸ்வோர்ட்-ஐ பிழையாக டைப் செய்தால் அடுத்த நொடியே, குறித்த நபரை உங்களது போனில் இருக்கும் முன்பக்க கேமரா மூலம் போட்டோ எடுத்து விடும் இந்த அருமையான செயலி.

இப்படி ஒவ்வொரு முறை பாஸ்வோர்ட்-ஐ பிழையாக டைப் செய்யும் போதும் இந்த செயலி குறித்த நபரை போட்டோ எடுத்து விடும்.






அதன் பின்னர், நாம் எமது ஸ்மார்ட் போனை அடுத்த முறை சரியாக

பாஸ்வோர்ட்-ஐ வழங்கி அன்லோக் செய்யும் போது இந்த செயலி தானாக திறந்து குறிப்பிட்ட போட்டோ-களை எமக்கு காட்டும்.

இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.



இந்த செயலியில் எடுக்கப்பட்ட போட்டோகளை மனுஅல் ஆக கூட எமக்கு பார்க்க முடியும். இதை செய்ய குறித்த செயலியை ஆரம்பித்து, அதில் காணப்படும் View Intrusions என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது போனை அன்லொக் செய்ய முயற்ச்சித்த அனைவரின் போட்டோகளையும் உங்களால் பார்த்து கொள்ள முடியும்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.