Skip to main content

பிரசவ காலத்தை கணக்கிடுவது எப்படி

‘கர்ப்ப காலம்’ என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாதத்தீட்டு சுற்று இருக்கக்கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள்
எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து
ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு, கடைசி மாத்தீட்டு ஜூன் மாதம் முதல் தேதியில் ஆரம்பித்திருந்தால், அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் ஜூன் எட்டாம் தேதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச் மாதம் வரும்.

ஆக, குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் தேதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட தேதியில் பிரசவிப்பார்கள். அறுபது சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட தேதியில் ஒரு வாரம் முன்னரோ அல்லது பின்னரோ பிரசவிப்பார்கள்.

கர்ப்பப்பையில் குழந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதுகுத் தண்டு முன்புறமாக வளைந்து, தலை வளைந்து, தாடை மார்பு எலும்பின் மேல் பட்டுக்கொண்டும், கைகள் வளைந்து மார்பின் குறுக்காக மடிந்து, கால்கள் வளைந்து தொடைகள் வயிற்றின் மீதும், முழங்கால்கள் வளைந்து தொடைகளின் மீதும் இருக்கும்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.