Skip to main content

காப்பர் டி பற்றி தெரியுமா

இன்றைய வாழ்க்கைச் சூழலில், ‘வீட்டுக்கு ஒரு வாரிசு போதும்’ என்ற மனரீதியில்தான் பெரும்பாலான தம்பதிகள் இருக்கின்றனர். ஒரு 
குழந்தை பிறந்ததும், அடுத்த குழந்தை வேண்டாம் என்று விரும்புபவர்கள், ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம். 

கருத்தடையில் தற்காலிகம், நிரந்தரம் என்று இரண்டு வகைகள் உள்ளன. காப்பர் டி பொருத்துவது என்பது தற்காலிகமானது. காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 

காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக் குழாயிலேயே தங்கிவிடலாம். 

எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது. இல்லையெனில், நோய்த் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது. காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம். அதன் பிறகு அகற்றுவது மிகவும் கஷ்டம்’.காப்பர் டி போடுவதற்கு முன்பும், பின்பும் தெரிந்துகொள்ள வேண்டியவை.  

காப்பர் டி போடுவதற்கு முன் கவனிக்கவேண்டியவை :

• வயது, இது தான் முதல் முறையா என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.

• மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும். 

• குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும். 

• ரத்தம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம். 

காப்பர் டி யை அகற்றுவதற்கு முன்கவனிக்க வேண்டியவை :

• காப்பர் டி நகர்ந்து இருந்தாலும், கண்டிப்பாக ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். 

• காப்பர் டி, கர்ப்பப்பைக்கு உள்ளே இருந்தால், மயக்க மருந்து கொடுத்துதான் எடுக்க வேண்டி இருக்கும்.  நோயாளிக்கு, வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியில்கூட உயிர் பிரிய வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பப்பைக்குள் சீழ் உண்டாகி, நோய்த் தொற்று வரலாம். 

இதனால், அதிக வலி, ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் இருக்கும். கெட்ட வாடை வீசும். மேலும், அகற்ற முடியாமல் போனால், அறுவைசிகிச்சைக் கூடத்துக்கு அழைத்துச்சென்று மயக்க மருந்து கொடுத்து, கர்ப்பப்பைக்குள் எண்டோஸ்கோபி மூலமாகப் பரிசோதிக்க வேண்டும். 

• திருமணமாகாதவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் போடுவது இல்லை. 

• கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.