Skip to main content

பச்சிளம் குழந்தையை பராமரிப்பது எப்படி

நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவை என்னவென்று பார்க்கலாம்.. 

• குழந்தை பிறந்த உடன், தங்களுடைய சாதாரண வாழ்க்கைக்கு மிகவும் வேகமாக திரும்பி விட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல பேர்
. புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும் பணிகளை செய்யவும் விரும்புவது தான் இந்த தவறுக்கு காரணமாகும். எனவே, நீங்கள் புதிதாக குழந்தை பெற்றவராக இருந்தால், உங்களுடைய உடலுக்குத் தேவையான ஓய்வை அளிக்க வேண்டும்.  

• குழந்தை தூங்கும் போது, குழந்தையின் நகத்தை வெட்டுவது எளிது. எனவே விழித்திருக்கும் போது குழந்தையின் நகத்தை வெட்டாமல் தூங்கும் போது வெட்டுவதே சிறந்தது. 

• குழந்தையை பராமரிப்பது மகிவும் கடினமாக விஷயம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு தாயைத் தவிர குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். குழந்தையின் மீது அன்பு செலுத்தி, அவர்களை கவனித்துக் கொள்ளும் நீங்கள் மிகவும் நல்ல 'அம்மா' தான். உங்களுடைய கணவரைப் போலவே, குழந்தைக்கும் உங்களுடைய நம்பிக்கை மிகவும் தேவைப்படும். 

• குழந்தை பிறந்தவுடன் புதிய அன்னையாக தோற்றம் கொண்டிருக்கும் நீங்கள், உங்கள் கணவரும் அந்த குழந்தைக்கு அப்பா என்பதையும், அவருக்கும் அன்பும், அரவணைப்பும் தரத் தெரியும் என்பதையும் மறக்கக்கூடாது. பெரும்பாலான தாய்மார்கள் செய்யும் பரவலான தவறாக இது உள்ளது. எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் அவருடைய அரவணைப்பையும், பராமரிப்பையும் குழந்தையின் பேரில் நீங்கள் திருப்பி விடலாம். 

• புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை மற்றவர்களிடம் கொடுத்தும் அமைதிப்படுத்த வேண்டும். குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை மற்றவர்களிடமும் கொடுத்து ஆற்றுப்படுத்துங்கள், அதன் மூலம் அவன் ஒரே ஆளிடம் இருந்து பழக மாட்டான். ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே உங்களுடைய குழந்தை அமைதியாக இருந்து பழகி விட்டால், அவர் இல்லாத போது மற்றவர்களிடம் குழந்தையை அமைதியாக இருக்க வைப்பது பெரும்பாடாகி விடும். 

• தாய்ப்பால் கொடுக்கும் போது, சிற்சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். நிறைய தாய்மார்கள் இந்த விஷயத்தில் உதவி கேட்க வெட்கப்படுவார்கள். தாய்ப்பால் என்பது இயற்கையாகவே வர வேண்டும் என்றும், இதில் தவறு நிகழ்ந்து விட்டால் வருத்தப்படுவதும் அவர்களுடைய தவறாக இருக்கும். ஆரம்பத்தில், எல்லா தாய்மார்களுக்கும் எளிதாக தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. இந்த விஷயத்தில் உங்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படும் என்பதால், உதவி கேட்க பயப்பட வேண்டாம்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.