தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – 1
வெண்ணெய் தேவையான அளவு
துருவிய கேரட் தலா ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
ஸ்வீட் கார்ன் சிறிதளவு
மிளகுத்தூள் ஒரு சிட்டிகை
செய்முறை
வாழைத்தண்டை நாரெடுத்து துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு…. வெங்காயம், கேரட், ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி, அரைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்து, கொதித்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.