Skip to main content

மேக்கப் போடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

நம்முடைய இயற்கையான தோற்றத்தை மேக்கப் போடுவதன் மூலம் மெருகூட்ட முடியும் என்றாலும், அதனை முறையாக நீக்காவிடில் மிகவும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பதை மறந்து விடக் கூடாது.


உங்களுடைய மேக்கப்பை கலைக்காமல் தூங்கினால் தோலில் உள்ள துளைகள் அடைத்துக் கொள்ளவும் மற்றும் அரிப்புகள் வரவும் செய்யும். இரவு தூங்கும் முன்னர் மேக்கப்பை கலைத்து விடுவது நல்லது. வீட்டிலேயே கிடைக்கக் கூடிய மேக்கப் நீக்கும் பொருட்களை கொண்டு சருமத்திற்கு பாதுகாக்கலாம்.

• உரிக்கப்பட்ட பாதாம் கொட்டைகளை எடுத்து, நன்றாக வெளிரும் வகையிலும், கிரீம் போலவும் அரைத்துக் கொள்ளவும். நாள் முழுவதும் உடலில் தங்கியிருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் மேக்கப்பை நீக்கவும் மற்றும் இயற்கையாகவே சுத்தம் செய்யும் கரைசலாகவும் பாதாம் பால் உள்ளது.

இவ்வாறு மேக்கப்பை நீக்கும் போது, சிறிதளவு பாதாம் பாலை எடுத்து ஒரு பருத்தி துணியை உருண்டையாக சுற்றி அதில் நனைத்து, முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு தேய்த்து விட்டு முகத்தை நன்றாக கழுவவும். அதிகபட்சமாக இருக்கும் பாதாம் பாலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தலாம்.

• வெள்ளரிக்காயின் ஈரப்பதத்தை நிறுத்தி வைக்கும் குணம், உங்கள் முகம் வறண்டு போகாமலும் மற்றும் சோர்வடையாமலும் இருக்கச் செய்ய உதவும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. நீங்கள் வெள்ளரிக்காய் சாற்றைக் கொண்டு உங்கள் முகத்தை கழுவலாம் மற்றும் வெள்ளரிக்காயை எடுத்து நன்றாக அரைத்து அந்த கலவையை முகத்தில் பசை போல தேய்த்து ஒட்டிக் கொள்ளவும் செய்யலாம்.

• ஆலிவ் எண்ணெய் இயற்கையான பொருளாகவும், சிறந்த மேக்கப் நீக்கும் சாதனமாகவும் உள்ளது. ஆலிவ் எண்ணெயை தனியாகவும் அலல்து காட்டுச் செடியுடன் () கலவையாகவும் கலந்து பயன்படுத்தலாம். காட்டுச்செடியுடன், ஆலிவ் எண்ணெயை கலந்து கிடைக்கும் கலவைக்கு சுருக்கங்களை கட்டுப்படுத்தும் குணமும், ஈரப்பதத்தை ஏற்படுத்தும் குணமும் உள்ளன. இந்த கலவை சரும துளைகள் அடைத்துக் கொள்வதை தவிர்க்கவும் மற்றும் மோசமான மேக்கப்பை நீக்கும் குணங்களும் உள்ளன.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.