Skip to main content

நவதானிய தோசை

தேவையானவை:
பாசிப்பயறு - கால் கப்,
கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்,
கொண்டைக்கடலை - கால் கப்,
பச்சரிசி - கால் கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
கொள்ளு - கால் கப்,
சோயா - கால் கப்,
வெள்ளை சோளம் - கால் கப்,
 எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3,
காய்ந்த மிளகாய் - 6,
இஞ்சி - ஒரு துண்டு,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு.


செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் போன்றவைகளால் உங்கள் குழந்தைக்கு அசெளகரியமா? இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...

மூக்கடைப்பு பிரச்சினையின் அறிகுறிகள் மூச்சு விடும் போது சத்தம் கேட்குதல் அல்லது சிரமப்படுதல் குறட்டை மூக்கு ஒழுகுதல் தும்மல் மூக்கு ஒழுகுதல் குழந்தைகள் மட்டும் ஏன் அடிக்கடி இதனால் பாதிக்கப்படுகிறார்கள்?