Thursday, May 15, 2014

ருசியான முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்

முட்டை,சாம்பார் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொத்த மல்லி இலை,கருவேப்பிலை,உப்பு. கசகசா,பட்டை,லவங்கம், பிரியாணி இலை,கிராம்பு மற்றும் கொத்தமல்லி பொடி,வெந்தயம், சீரகம்,மிளகு பொடி,சிறிது சிக்கன் மசாலா பொடி.

தேங்காய் அரைத்து போடுவதற்கு பதில் தேங்காய் பால்,சிறிது நெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்

பத்திரத்தில் நல்லெண்ணெய்,நெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை,சீரகம், வெந்தயம்  பொரிந்ததும் வெங்காயம்,பச்சை மிளகாய்,சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி குழையும் வரை வதக்கிஅவற்றில் உப்பு,கொத்தமல்லி பொடி,மிளகு பொடி, கசகசா,பட்டை,லவங்கம், பிரியாணி இலை,கிராம்பு
மற்றும் மிளகு பொடி,சிறிது சிக்கன் மசாலா பொடி சேர்த்து வதக்க வேண்டும்.

இத்துடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

மசால்வாடை போனதும் சிம்மில் வைத்து முட்டையை மெதுவாக உடைத்து ஊற்றவும்.முட்டையை உடைத்து ஊற்றியதும் குழம்பை கரடியால் கிளற கூடாது.

ஒரு பக்கத்தில் முட்டை வெந்ததும் அதை கவனமாக கரண்டியால் எடுத்து திருப்பி போட வேண்டும். இருபக்கமும் வேகவைக்க வேண்டும்

கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான முட்டை குழம்பு ரெடி!