Skip to main content

தாய்ப்பால் கொடுக்கும் மகளிர் அறிந்து கொள்ள வேண்டியவை

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தாய்ப்பால் தான் குழந்தையின் ஆரோக்கியத்தைக்
காக்கும் உணவுப் பொருள்.

அத்தகைய தாய்ப்பாலானது குறைய ஆரம்பித்தால், அப்போது உடனே அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து, அதனை சரிசெய்து கொள்ள வேண்டும்.

• தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் சத்துக்களான புரோட்டீன், கால்சியம் போன்றவை உடலில் இல்லாவிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியைக் குறைத்துவிடும்.

• தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்மார்கள் பிறப்புக்கட்டுப்பாட்டு மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது. பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளில் உள்ள ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தி, தாய்ப்பால் உற்பத்தியைக் குறைத்துவிடும்.

• தாய்ப்பால் உற்பத்தி குறைவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். தாய்ப்பால் உற்பத்திக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது.

• சீரான இடைவேளையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும், தாய்ப்பால் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வர வேண்டும்.

• தவறான தாய்ப்பால் கொடுக்கும் முறையினாலும், தாய்ப்பால் உற்பத்தியானது குறையும். ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு பசிக்கவில்லை என்று எண்ணி சரியாக தாய்ப்பால் கொடுக்காமல் இருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் வயிறு நிறைய பருகுமாறு செய்யுங்கள். இல்லாவிட்டால், தாய்ப்பால் சுரப்பியினால் தாய்ப்பாலை சீராக சுரக்க முடியாது.

• மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.