Skip to main content

சரும நோய் போக்கும் ஸ்ரீ சொளந்தர நாயகி சமேத ஸ்ரீ சித்தநாதர் ஆலயம்!

ஆண்டாண்டு காலமாய் மக்களின் நோயைப் போக்கி வாழ்வில் வசந்தம் அளிக்கும் ஆலயங்கள் அநேகம்! அத்தகைய சிறப்புமிக்க கோயில்களுள் பிரசித்திப் பெற்றது பெரிய கோயில் எனப்படும் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ
சித்தநாதர் ஆலயம். இந்தத் தலம்


கும்பகோணம், நாச்சியார் கோயிலை அடுத்த திருநரையூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது. இறைவன் சித்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.


மேற்கு பார்த்த 75 அடி உயர ராஜகோபுரம்! உள்ளே சென்றதும் முதலில் நாம் காண்பது தெற்கு நோக்கி அருள்புரியும் அம்பாள் ஸ்ரீ சௌந்தர்ய நாயகியின் சந்நிதி. அழகிய திருமேனி! காண கண்கோடி வேண்டும். பக்தர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பவள்.


இறைவன் லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். இவர், சித்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் விளங்குவதால் இவரை வணங்கும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் சித்தியாகின்றன.


துர்வாச முனிவர் தன் சாபம் நீங்க வழிபட்டத் தலம். கோரக்கர் சித்தர் வழிபட்டத் தலமும் இதுதான். அவர், இவ்வாலயத்தில் தங்கியிருந்து மக்களின் நோய்களைப் போக்கியதாகச் சொல்லப்படுகிறது. இங்கு அமையப்பெற்றுள்ள கோரக்கர் சித்தரின் திருமேனியில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை எடுத்து சருமத்தின்மீது தடவிக் கொண்டால், சருமம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கிவிடுகிறது. இது காலம் காலமாக இக் கோயிலில் நடைபெற்று வரும் ஒன்றாகும். சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளி நோயையும் போக்கிவிடும் ஆற்றல் இந்த எண்ணெய்க்கு உண்டு என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.


ஸ்ரீ லட்சுமி தேவி இத்தலத்தில் குழந்தையாக அவதரித்துள்ளார். மகரிஷி ஒருவர் குழந்தை லட்சுமியை எடுத்து வளர்த்து, உரிய பருவம் வந்ததும், நாச்சியார்கோயில்


ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. இந்தத் திருக்கல்யாண வைபவம், ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழாவின்போது நடத்தப்பட்டு வருகிறது.


ஆலயத்தின் வடமேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் தனி சந்நிதியில் கோயில் கொண்டு அருள்புரிகிறார். வெள்ளிக்கிழமைதோறும் காலையில் ஸ்ரீ மகாலட்சுமி சூக்த ஹோமம் நடைபெறுகிறது. அதோடு, ஒவ்வொரு பௌர்ணமியின்போதும்,மாலை நேரத்தில் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் செந்தாமரை இதழில் ஹோமரட்சை பிரசாதமாக தரப்படுவது இங்கு விசேஷம். சித்த வைத்தியம் படிப்பவர்கள், சித்த மருந்துகள் தயாரிப்பவர்கள், சங்கீத விற்பன்னர்கள்,பாடலாசிரியர்கள் ஆகியோர் இத்தலத்து இறைவனையும் அம்பாளையும் தரிசனம் செய்தால் சிறப்பான மேன்மையை அடைவர்.


பக்தர்கள், திருநரையூர் திருத்தலத்து இறைவனை உளமார வழிபட்டு வந்தால், நோயில்லா உடம்பும், குறைவில்லா செல்வமும் அடைந்து இன்புறலாம்.



கும்பகோணம் நாச்சியார் கோவில் பாதையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ளது இத்தலம். இது திருநிரையூர் சித்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்து ஈசனின் திருப்பெயர் சித்தநாதர் அன்னை சௌந்தர்ய நாயகி. 5 நலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. திருக்கோவில். கோவிலில் ஏழு வாயில்கள் தாண்டி கர்பக்ரஹத்துள் ஸ்ரீசித்தநாதரை நாம் தரிசிக்கலாம்.

ராஜ கோபுரம் கடந்து உள்ளே நுழைந்த பின் இரண்டாவது வாயிலில் துவார கணபதி. துவார முருகனை தரிசிக்கலாம். பின் வரும் இரண்டு வாயில்களிலும் துவார பாலகர்கள் காவலிருக்க, அர்த மண்டபம் கடந்து கர்பகிரஹத்துடன் சித்தநாதர், நாதேஸ்வரர் என்று போற்றப்படும் மூலவர். லிங்கத் திருமேனி பெரியதாக, கம்பீரமாய்த் திருக்காட்சி தருகிறது.

மேற்கு பார்த்த ­மூலவர் சன்னதி விசேஷம். செம்பருத்தி மலர்களாலும், செவ்விருக்ஷி மலர்களாலும் அர்ச்சனை, ருத்ராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கும் ஈசனின் அழகே அழகு கோர சித்தர் இத்தலத்தில் தங்கியிருந்து நீண்ட காலம் வழிபட்டு தன் வெண்டுஷ்ட நோய் நீங்கப் பெற்ற தலம்! பிரம்மன், குபேரன், கந்தர்வர்கள், மார்கண்டேஸ்வரர் ஆகியோர் பூஜித்துப் பேறுகள் பெற்ற தலம். துர்வாச முனிவரின் சாபத்தால் நிரநாராயணர் பக்ஷி உருவான போது இத்தலம் வந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். இத்தலத்து ஈசன் சித்தர்களுக்கெல்லாம் சித்தனாக, கருணா ­ர்த்தியாய் கலியுகத்தில் மானிடர் நோய் தீர்த்தருளும் நாதனாய் இத்தலத்தில் கொலுவீற்றிருக்கிறார். ஈசனுக்கு நில்லெண்ணெய் அபிஷேகம் விசேஷமானது. வெண்குஷ்டம் உள்ளவர்கள்.

இத்தலம் வந்து, இரவு 108 வில்வ தளங்களினால் ஈசனைப் பூஜித்து, காலை பிரம்ம முஹுர்த்த காலத்தில், கோவிலில் ஈசனுக்குச் சாற்றப்படும். ­லிகைகள் கலந்த நில்லெண்ணெய் வாங்கி உடலில் தடவிக் கொண்டு சூலதீர்த்தத்தில் நீராடி பக்தியோடு திருநீரணிந்து ஈசனின் சன்னதிக்கு வந்து, முதல் நாள் செய்த வில்வார்ச்சனையின் வில்லங்களை நின்றாக மென்று தின்று ஈசனின் தரிசனம் கண்டு மனமுருகித் தொழுதால், வேண்டிய வரம் தந்து, சகல விதமான நோய் நொடிகளையும் தீர்த்து பேரருள் புரிவார் என்று தலபுராணம் கூறுகிறது. இப்படி 3 மண்டபலம் விடாது செய்தால், தம் நோய் நீங்கி தேஹ ஆரோக்யம் பெறலாம் என்றும் வரலாறு.

ஒரு சமயம் மேதாவி மகரிஷி இத் தலம் வந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மியே தன் மகளாக அவதரிக்க வேண்டுமென நீண்ட காலம் தவமியற்றினார். அவரது தவத்திற்கு மகிழ்ந்து இறைவன், அப்படியே அவருக்கு வரமளித்தான். பின்னர் அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி அவரது மகளாக அவதரித்தார். மழலை கொஞ்சப் பேசி அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாள். அவரும் அன்னையை மழலை மஹாலக்ஷ்மியாகப் போற்றிக் கொண்டாடினார். அவள் திருமண வயதை எட்டிய போது நாராயணரும் இத்தலம் வந்து சேர, இத்தலத்து ஈசனும் அன்னையும் மஹாலக்ஷ்மிக்கும், நாராயணருக்கும் திருமணம் செய்து வைத்தார்களாம்! இன்றும் பிரதி பௌர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ மழலை மஹாலக்ஷ்மியின் சன்னதியில் ஹோமங்கள் (ஸ்ரீசக்த ஹோமம்) செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, மழலை மஹாலக்ஷ்மியின் அருளால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடுகிறது! புத்திர பாக்யம் இல்லாதவர்களுக்கு உடனடியாக அப்பாக்கியம் வாய்க்கிறது!!

சௌந்தர்ய வடிவினளாய், நன்ற திருக்கோலத்தில், சதுர்புஜங்களுடன் கம்பீரமாய்த் திருக்காட்சி தருகின்றாள். கேட்டவரம் கொடுக்கும் வரபிரசாதியாம் இந்த அன்னை! அன்னையின் சன்னதி வந்து மனமுருகி வேண்டிக் கொண்டால். தட்டாமல் நறைவேற்றி வைப்பாளாம்!!
கோஷ்டத்தில் கோர சித்தரும், மேதாவி மகரிஷியும், சிலா ரூபத்தில் தரிசனம் தருகின்றார். மேலும் கால பைரவர், வீர பைரவர், பஞ்சபூத லிங்கங்கள் அமைந்துள்ளன. மேலும் மழலை மஹாலக்ஷ்மி தனிச் சன்னதி கொண்டு, நாடி வரும் பக்தர்களின் துயர் துடைத்து, அருள் செய்கிறாள்.

அவள் சன்னதியை அடுத்து கல்லில் நிடராஜர், ரிஷபாரூடர், பிக்ஷடணர் ­ர்தங்களைத் தரிசிக்கலாம். வைத்த கண்ணை இமைக்கவும் மறந்து நற்கிறோம். அப்படி ஒரு அழகு! தாருகா வனத்து ரிக்ஷிபத்னிகள் பிஷாடணர் பின்னால் சென்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! கல்லில் வடித்த சிவா திருமேனியே இப்படி ஒரு அழகென்றால்… பிஷாடணர் எப்படி இருந்திருப்பார். பொதுவாகப் பஞ்சலோக விக்ரஹமாகவே நாம் தரிசித்திருக்கும் நிடராஜரும் இங்கே கல்லில் அமைந்திருக்கிறார். ஒரு கையை ரிஷபத்தின் மீது வைத்து ஒயிலாக நன்றிருக்கிறார். ரிஷாபாரூடர். இம் ­வரையும் வடித்த சிற்பி ஒரு தெய்வீகக் கலைஞர் என்பது உறுதி நுணுக்கமான கலையுணர்வு மிக்கவர்!!

பெரிய கோவில், நில்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிவாச்சாரியார் 70 வயதைக் கடந்தவராயினும் ஈசனையும், அன்னையையும் தன் குழந்தைகள் போல் பாவித்துக் கொண்டாடுகிறார்.
ஈசனது விபூதியை சித்தநாதர் என்று சொல்லிப் பிரார்த்தித்து நெற்றியில் இட்டு வாயிலும் போட்டுக் கொண்டால் தீராத நோய் தீர்த்தருள்வார். நனைத்ததை நிடத்தி வைக்கும் சௌந்தர்ய நாயகி, திருமண பாக்யத்தையும், புத்திர பாக்கியத்தையும் தரும் மழலை மஹாலக்ஷ்மி என தெய்வங்கள் அனைவரும் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அற்புதமான தலம். இத்தலத்தில் வஞ்சித் தடாகம் சித்தாமருத தீர்த்தம். ஆலதீர்த்தம், பிரம்மதீர்த்தம் பக்ஷிதீர்த்தம் என்பன தீர்த்தங்களாய் விளங்குகின்றன. தலவிருக்ஷம் பாரிஜாதம் பிரம்மன், நாராயணர், சித்தர்கள், மகரிஷிகள் வழிபட்ட இத்தலத்தை நாமும் வழிபட்டு நின்மைகள் பல பெறுவோம்!!

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.