தேவையானவை :
கேரட் - 2
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
1.முதலில் கேரட்டைக் நன்றாக கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.ஒரு கடாயில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும்.
3.இறுதியாக காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து மிச்சியில் விழுதாக அரைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.