வாழைப்பழம் - ஒன்று
ஆப்பிள் - ஒன்று
மாம்பழம் - ஒன்று
வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் மாம்பழம் ஆகியவற்றின் தோலை நீக்கிவிட்டு பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கவும். பேரீட்சையின் விதையை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய பழத் துண்டுகளிலிருந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து. மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும்.
மிக்ஸியில் பெரிய துண்டுகளாக நறுக்கிய பழங்களைப் போட்டு அரைக்கவும்.
பழத் துண்டுகள் நன்கு அரைபட்டு கூழாகி இருக்கும்.
நாண் ஸ்டிக் அல்லது அடிகனமான பாத்திரத்தில் பழக் கூழைப் ஊற்றி, அத்துடன் சிறிய பழத் துண்டுகளையும் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
10 - 15 நிமிடங்களில் பழக் கலவை நன்றாக வெந்து, பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.