Skip to main content

இஞ்சி துளசி டீ செய்முறை - குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நிறைய மருத்துவர்கள் இஞ்சி டீயை குடிக்க சொல்வார்கள். 

செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.

தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். 

வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.


தேவையான பொருட்கள் : 

டீத்தூள் - 4 டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
எலுமிச்சைப் பழச்சாறு - 2 ஸ்பூன்
கறுப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்,
இஞ்சி சாறு - சிறிது,
துளசி - 5 இலைகள்
.




செய்முறை...  

• ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

• தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சி சாறு, துளசியை சேர்த்து 4 நிமிடம் மூடி வைக்கவும்.

• பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப   சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி கறுப்பு உப்பு ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

• பால் இல்லாத இந்த டீ மிகமிக சுவையாக இருக்கும். சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.








Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.