தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க: எள் – கால் கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்துருவல் – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். எள்ளைக் கல் இல்லாமல் அரித்து, தண்ணீரை வடித்துவிட்டு, வெறும் வாணலியில் போட்டு நன்கு பொரியும் வரை வறுத்தெடுங்கள். மீண்டும் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த எல்லாவற்றையும் வெல்லத்தோடு ஒன்றாகச் சேர்த்துப் பொடியுங்கள். இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து, நன்கு கிளறுங்கள். நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டிப் பரிமாறுங்கள். சுவைக்கு சுவை. ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!