கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சனை வருவதற்கு உடலில் ஏற்படும்
மாற்றங்களே முதல் காரணமாக உள்ளன. இந்த மாற்றங்களால் குடல் தசைகள்விரிவடைகின்றன.
செரிமானம் செய்யும் அளவு குறைந்து விடுகிறது. மேலும் உணவு முறைகளில் மாற்றங்கள் செய்வதும் கூட வாயு பிரச்சனை வரக் காரணமாக இருக்கிறது. இவ்வாறு
ஏற்படும் வாயு பிரச்சனைகளுக்கான சில எளிய தீர்வுகளை நாம் இப்போது பார்ப்போம்.
ஏற்படும் வாயு பிரச்சனைகளுக்கான சில எளிய தீர்வுகளை நாம் இப்போது பார்ப்போம்.
• மிகவும் அதிகமான உணவை சாப்பிடுவதற்கு பதிலான நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை வருவதை தவிர்க்கலாம். அதிக உணவை சீரணம் செய்ய இயலாமல் வயிறு உப்புசம் மற்றும் வாயு தொல்லை ஏற்படும்.
• நொறுங்கத் தின்றால் நூறு வயது என்ற பழமொழியில்படி உணவை நன்கு மென்று நிதானமாக உட்கொள்ள வேண்டும். இப்படி உண்பதால் வாயில் சுரக்கும் உமிழ் நீர் உணவுடன் நன்கு கலக்கும். இது செரிமான தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் குடலில் செயல் திறனை சற்றே குறைக்கும் தன்மை கொண்டவை. அதனால் உணவை நன்கு மென்று உண்டால் வாயு பிரச்சனை அணுகாது.
• உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அல்லது குறைவாக குடிக்க வேண்டும். சாப்பாட்டின் இடையே குடிக்கும் தண்ணீரானது செரிமானத்திற்கு தேவையான என்ஸைம்களை நீர்த்து போகச் செய்கிறது. இதன் காரணமாக வாயு தொல்லை ஏற்படும்.