உலர் திராட்சையில் அப்படி என்னதான் இருக்கு!

1.. சாதாரண திராட்சைப் பழத்தைவிட உலர் திராட்சையில் வைட்டமின் அதிகம் உள்ளன. அமினோ அமிலங்கள், பொட்டாசியம், சுக்ரோஸ், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

2. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

3. மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

4. மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின் காலையிலும்,மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களை சாப்பிட்டுவந்தால் மூலநோய் பாதிப்பில் இருந்து மீளலாம்.

5. மலச்சிக்கலால் தவிப்பவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும்முன் ஒரு கைபிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும். இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் கண்விழித்ததும் உலர் திராட்சையை நசுக்கி, அதன் சாற்றை மட்டும் குடிக்கக் கொடுத்தால் போதும்.

6. குழந்தைகளுக்கு உலர் திராட்சையை அப்படியே கொடுக்கக் கூடாது. அதை நன்றாக அலசிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்தான், குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

7. கர்ப்பிணிகளுக்கு வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

8. இதேபோன்று மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்கள், ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
Share on Google Plus

About Vaitheeswara prabu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.